wheat flour export: கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு

By Pothy Raj  |  First Published Aug 25, 2022, 5:21 PM IST

பொருட்களின் விலை உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீரென கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.


பொருட்களின் விலை உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கோதுமை மாவு ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீரென கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று கூடி ஆலோசித்து இந்த முடிவை எடுத்தது. 

Tap to resize

Latest Videos

ஒரு தேசம்! ஒரே உரம் ! வருகிறது ‘பாரத் பிராண்ட்’: மத்திய அரசு அறிவிப்பு: காங்கிரஸ் விமர்சனம்

இதன்படி, கோதுமைஏற்றுமதி கொள்கையில் திருத்தம் கொண்டு வரவும், கோதுமை மற்றும் மெஸ்லின் மாவு ஏற்றுமதியில் விதிவிலக்குகளை நீக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் , வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்துக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், கோதுமை மாவு விலை உயர்வு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

‘என் ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவிடம் ரூ.800 கோடி எப்படி வந்தது?’ கெஜ்ரிவால் கேள்வி

ரஷ்யா உக்ரைன் போரால் பல்வேறு நாடுகளுக்கு கோதுமையை இந்தியா ஏற்றுமதி  செய்தது. இதனால் உள்நாட்டில் கோதுமை பற்றாக்குறை வந்துவிடக்கூடாது என்பதாலும், உள்நாட்டில் கோதுமை விலை உயர்ந்ததாலும் கோதுமை ஏற்றுமதிக்கு தம்திய அரசு தடை விதித்தது. அதுமட்டுமல்லாமல் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்-ஐ தகுதி நீக்கம் செய்ய அம்மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை!

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதி்க்கப்பட்டதால், சர்வதேச சந்தையில் கோதுமை மாவுக்கான தேவை அதிகரித்தது. இதனால் கோதுமை மாவு ஏற்றுமதி ஏப்ரல் முதல் ஜூலை வரை 200 சதவீதம் அதிகரித்தது. கோதுமை மாவு ஏற்றுமதியால் உள்நாட்டு சந்தையில் கோதுமை மாவு விலை உயர்ந்தது. இதையடுத்து கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

click me!