சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட கட்டிவைக்கப்பட்ட நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். அவரிடமிருந்து அமெரிக்க பாஸ்போர்ட் காப்பியும், தமிழக முகவரியுடன் கூடிய ஆதார் அட்டையும் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மரத்தில் இரும்புச் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பபெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
முதலில், வனப்பகுதிக்கு அருகே கொங்கன் பகுதியில் உள்ள சவந்த்வாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் சிந்துதுர்க்கில் உள்ள ஓரோஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது மனநலம் மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் மேல் சிகிச்சைக்காக கோவா மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்,
அக்காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட அப்பெண்ணிடமிருந்து தமிழ்நாட்டு முகவடிரியுடன் கூடிய ஆதார் அட்டை மற்றும் அவரது அமெரிக்க பாஸ்போர்ட் நகல் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் மீட்டுள்ளனர். அதில், அவர்களது பெயர் லலிதா கயி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது விசா காலாவதியாகிவிட்டதாகவும், அவரது குடியுரிமையை உறுதிப்படுத்த கண்டெடுக்கப்பட்ட இந்த ஆவணங்கள் சரிபார்த்துவருவதாகவும், வெளியுறவுத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
undefined
தாமரை வியூகம் உடைத்தெறியப்படும்; அச்சத்தில் ஒன்றிய அமைச்சர்கள்: மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு!!
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வருவதாக தெரிவித்தார். தற்போதைக்கு, அப்பெண் வாக்குமூலத்தை அளிக்கும் நிலையில் இல்லை என்றும், இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாததாலும், வனப்பகுதியில் கனமழை பெய்ததாலும் அவர் பலவீனமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் எத்தனை நாட்களாக கட்டிவைக்கப்பட்டாள் என்பது தெரியாது என்றும் கூறுகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவரது கணவர் அப்பெண்ணை இங்கே அழைத்து வந்து கட்டி வைத்துவிட்டு ஓடிவிட்டார் என்று நினைப்பதாக போலீசா் தெரிவித்தனர்.
மேற்படி விசாரணைக்காக போலீசார் தமிழ்நாடு, கோவா மற்றும் வேறு சில இடங்களுக்கு சென்றுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ரத்து; பதவியை காப்பாற்றிக் கொண்ட மகாலட்சுமி