டெல்லியில் பெய்த தொடர் மழையில், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ் தளத்தில் சிக்கிய மாணவர்கள் 3பேர் உயிரிழந்னர். கரோல் பாக் பகுதியில் சக மாணவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கீழ் தளங்களில் இயங்கி வந்த பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மத்திய டெல்லியின் பழைய ராஜீந்தர் நகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலையின் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையைத் தொடர்ந்து, பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியதில் மூன்று சிவில் சர்வீஸ் தேர்வுக்காக படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி மற்றும் கேரளாவைச் சேர்ந்த நெவின் டால்வின் ஆகியோரின் உடல்களை மீட்புப் பணியாளர்கள் அடித்தளத்தில் இருந்து மீட்ட வெளியே எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, சக மாணவர்கள் அப்பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மாணவர்களுக்கு நீதிகேட்டு சக மாணவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதையடுத்து, கீழ்தளங்களில் செயல்படும் கோச்சிங் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
Hyderabad’s Tania Soni Identified Among Three Victims of Delhi Coaching Centre Flood
Three students who fell victim to a flood in the basement of Rau’s IAS coaching centre in Delhi have been identified by Delhi Police.
The victims were trapped for over four hours when water… pic.twitter.com/33mR9m8JPR
undefined
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், நிறுவனம் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியதுடன், மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
ஷ்ரேயா யாதவ்
உத்தரபிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 25 வயது மாணவி ஷ்ரேயா யாதவ், ஏப்ரல் 2024-இல் ராவின் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார். ஸ்ரேயா, சுல்தான்பூரில் உள்ள கமலா நேரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். ஸ்ரேயாவின் தந்தை அம்பேத்கர் நகரில் பால் கடை நடத்தி வருகிறார். தனது மகள் இறந்த சம்பவம் குறித்து நிறுவனம் தங்களுக்கு தவகல் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும், ஊடகங்கள் மூலம் தான் இது குறித்து அறிந்ததாகவும் அவரது தந்தை குற்றம் சாட்டினார். இதற்கிடையில், ஸ்ரேயாவின் மாமா தர்மேந்திர யாதவ், மருத்துவமனையில் அவரது உடலை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
பிளடி ராஸ்கல் நாடகமா ஆடுற? நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு
தன்யா சோனி
தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தைச் சேர்ந்த தன்யா சோனி என்ற 25 வயது மாணவி, DU-இன் மகாராஜா அக்ரசென் கல்லூரியின் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த அவர், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பயிற்சி நிறுவனத்தில் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் அவுரங்காபாத் கொண்டு செல்லப்பட்டது.
நெவின் டால்வின்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 28 வயதான ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் நெவின் டால்வின், எட்டு மாதங்களாக டெல்லியில் வசித்து வந்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருந்தார். பட்டேல் நகரில் தங்கியிருந்த நெவின், சனிக்கிழமை காலை 10 மணியளவில் அடித்தளத்தில் அமைந்துள்ள நூலகத்திற்குச் சென்றுள்ளார். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.
பெங்களூர் பிஜி ஹாஸ்டலில் இளம்பெண் கதறவிட்டு கொலை.. ம.பி.யில் வைத்து இளைஞரை தூக்கிய போலீஸ்!
2 சவரன் நகைக்காக மூதாட்டியின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தம்பதி