மோடி முதல் ஸ்டாலின் வரை ஆட்சி பொறுப்பில் அமர வைத்த பி.கே. அக்.2ல் புதிய கட்சி தொடக்கம்

By Velmurugan sFirst Published Jul 28, 2024, 11:59 PM IST
Highlights

தேர்தல் வியூக நிபுணராக அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர் வருகின்ற அக்டோபர் 2ம் தேதி புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

மக்களுக்கு நல்லபல திட்டங்களை எடுத்துச் சொல்லி ஆட்சிக்கு வந்த காலம் மாறி தனியார் நிறுவனங்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வரும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் வியூக நிபுணராக அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பலருக்காகவும் பணியாற்றி அவர்களை வெற்றிகரமாக ஆட்சி பொறுப்பில் அமர வைத்தவர். பி.கே. என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

செய்தியாளர் சந்திப்பில் மூக்கில் இருந்து வழிந்த ரத்தம்; குமாரசாமிக்கு திடீர் உடல்நலக் குறைவு

Latest Videos

பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் அவரது கட்சிக்கு ஜன் சூராஜ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆடி கிருத்திகை; பால்குடங்களுடன் முருகன் கோவில்களுக்கு படையெடுக்கும் பக்தர்கள்

இது தொடர்பாக பீகார் தலைநகர் பாட்னாவில் தனது அமைப்பான ஜன் சூராஜ் அபியான் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், “புதிய கட்சி வருகின்ற அக்டோபர் மாதம் 2ம் தேதி தொடங்கப்படும். தனது கட்சி மக்களுக்கான அரசாங்கத்தை அமைக்கும். மேலும் கட்சி தொடங்கப்படும் முதல் நாளிலேயே 1 கோடி உறுப்பினர்களைக் கொண்ட முதல் கட்சியாக ஜன் சூராஜ் கட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும். இந்த கட்சி எந்தவொரு குறிப்பிட்ட சாதி, குடும்பம் மற்றும் சமூகத்துக்குள் அடங்கிவிடாது. இது பீகார் மக்களின் கூட்டு முயற்சி” என்று தெரிவித்துள்ளார்.

click me!