ஆண்களுக்கும் சம உரிமை இருக்கு... பொய் பலாத்கார வழக்கில் புத்தி சொல்லி தீர்ப்பு கொடுத்த நீதிமன்றம்!

By SG Balan  |  First Published Jul 28, 2024, 10:57 PM IST

"இன்றைய காலத்தில் பல காரணங்களுக்காக பலாத்கார வழக்குகள் தொடரப்படுகின்றன. பொய்யான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்படும் நபரின் வாழ்க்கையை மட்டுமல்ல, நற்பெயரையும் அழிக்கின்றன" என்றும் நீதிமன்றம் எடுத்துரைத்தது.


பொய்யான பலாத்கார வழக்குப் பதிவு செய்த பெண் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளை தனிப்பட்ட பகையைத் தீர்ப்பதற்கு ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுரை கூறியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி ஷெபாலி பர்னாலா டாண்டன், இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவரின் வாழ்க்கை, நற்பெயர் மற்றும் சமூக அந்தஸ்தை அழிக்கிறது என்றும் தெரிவித்தார்.

Latest Videos

undefined

ஜூலை 14 அன்று அந்த நபருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மறுநாள் அவர் குற்றம் சாட்டப்பட்டவருடன் தானாக முன்வந்து ஒரு ஹோட்டலுக்குச் சென்றதாக அவரது வழக்கறிஞர் மாஜிஸ்திரேட்டிடம் ஒரு வாக்குமூலம் அளித்திருக்கிறார். அங்கு சென்று சம்மதத்துடன் தான் உடலுறவு கொண்டிருக்கிறார் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆபாச வீடியோ பார்த்து தங்கையை பலாத்காரம் செய்த சிறுவன்! தாயின் கண்முன்னே கொடூரக் கொலை!

ஆனால், அன்று குற்றம் சாட்டப்பட்டவருடன் சண்டை ஏற்பட்டதால், எரிச்சலடைந்த பெண் காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார். தன் ஆத்திரத்தைக் காட்டுவதற்காக கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

அப்போது, "அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமது நாட்டு ஆண்களுக்கும் சம உரிமையும், பாதுகாப்பும் உள்ளது. ஆனால், பெண்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், பெண்களைப் பாதுகாப்பதற்கான இந்தச் சிறப்புச் சலுகைகளை பழி தீர்ப்பதற்கு சுய லாபத்துக்காகவோ பயன்படுத்தக் கூடாது. இதுபோன்ற தவறான செயல்கள் சமூகத்தில் தலைவிரித்து ஆடுகின்றன" என்று நீதிமன்றம் கூறியது.

"இன்றைய காலத்தில் பல காரணங்களுக்காக பலாத்கார வழக்குகள் தொடரப்படுகின்றன. பொய்யான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்படும் நபரின் வாழ்க்கையை மட்டுமல்ல, நற்பெயரையும் அழிக்கின்றன" என்றும் நீதிமன்றம் எடுத்துரைத்தது.

பலாத்காரம் என்பது மிகவும் கொடூரமான மற்றும் வேதனையான குற்றம் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அது பலாத்கார புகார்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் நீதிமன்றம் கவலை தெரித்திருக்கிறது.

ஜூலை 25ஆம் தேதி மனுதாரரின் வழக்கறிஞரே நீதிமன்றத்தின் முன் மீண்டும் நடந்த உண்மைகளை வாக்குமூலமாகக் கூறினார். அதன்படி, நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  நீதிமன்றத்தில் ஜாமீன் பத்திரத்திற்கு ரூ.20,000 செலுத்திவிட்டு ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தானில் பயங்கர கலவரம்: நிலத் தகராறால் நடந்த சண்டையில் 36 பேர் பலி; 162 பேர் காயம்

click me!