இந்திய அரசியலிலேயே அதிகமான ஊழல் நிறைந்த குடும்பம் என்றால் அது சோனியா காந்தி குடும்பம்தான் என்று பாஜக காட்டமாக விளாசியுள்ளது.
இந்திய அரசியலிலேயே அதிகமான ஊழல் நிறைந்த குடும்பம் என்றால் அது சோனியா காந்தி குடும்பம்தான் என்று பாஜக காட்டமாக விளாசியுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ராவுக்கு எதிரான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்ய ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, இந்த விமர்சனத்தை பாஜக சோனியா குடும்பத்துக்கு எதிராக வைத்துள்ளது.
பாஜக செய்தித்தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாரத் பயோடெக்கின் மூக்குவழி(nasal) செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலை வெளியீடு
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ராவுக்கு எதிரான சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மவுனம் கலைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி மத்தியிலும் ஹரியானா, ராஜஸ்தானிலும் ஆட்சியில் இருந்தபோது ராபர்ட் வத்ரா செய்த ஊழல்கள் பற்றி கூற வேண்டும்.
இந்தியாவிலேயே தார்மீக நேர்மைக்கு மாறாக நடக்கும் குடும்பமாக இருக்கிறது. ஊழலை மட்டுமே வைத்திருந்து, வத்ராவுக்கு நிலங்களை பறித்துக்கொடுக்கும் கட்சியாக காங்கிரஸ் இருந்துள்ளது. வத்ராவை நாங்கள் குறிவைக்கவில்லை. அவர் குறித்து நீதிமன்றமே அவருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
சோனியா காந்தி குடும்பம் இந்திய அரசியலிலேயே அதிகமான ஊழல்நிறைந்த குடும்பமாகும். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி என குடும்பத்தின் 3 உறுப்பினர்களான தற்போது ஊழல் வழக்கில் பிணையில் உள்ளனர். மத்திய அரசு ஊழல் ஒழிப்பில் தீவிரமாக இருக்கும் போது, இது தீவிரமான குற்றச்சாட்டு” இவ்வாறு பாட்டியா தெரிவித்தார்
இந்துக்களே கத்திய கூர்மையாக வெச்சிருங்க!பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் மீது 7 பிரிவில் வழக்கு
ராபர்ட் வத்ரா நடத்தி வந்த ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் பிகானிரில் நிலம் வாங்கியது தொடர்பாக அமலாக்கப்பிரிவு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தன்மீதான அமலாக்கப்பிரிவு குற்றச்சாட்டையும், விசாரணையையும் ரத்து செய்யக் கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ராபர்ட் வத்ரா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.