பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்குவழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தான இன்கோவாக்(incovacc) விலையை அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்குவழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தான இன்கோவாக்(incovacc) விலையை அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
பூஸ்டர் டோஸாக பயன்படுத்தப்படும் இன்கோவாக் தடுப்பு மருந்து அரசுக்கு அதிகக் கொள்முதலின்போது ரூ.325க்கும், தனியார் மருத்துவமனைகள், தனியாருக்கு விற்பனை செய்யும் போது ஒரு டோஸ் ரூ.800 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகளின் ஆபாச வீடியோ வெளியிட்டதை தட்டிக்கேட்ட BSF வீரர் அடித்துக் கொலை: குஜராத்தில் பயங்கரம்
மத்திய அரசின் கோவின் தளத்தில் இந்த இன்கோவாக் மருந்து இருக்கும், ஆனால், ஜனவரி கடைசிவாரத்தில்தான் சந்தைக்கு முழுமையாகவிற்பனைக்கு வரும் என ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்தை கொள்முதல் செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இன்கோவாக் தடுப்பு மருந்தை 18வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இந்த மருந்தை பூஸ்டர் டோஸாக பயன்படுத்தலாம். முதல் இரு தடுப்பூசிகள் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்தி இருந்தாலும், இந்த இன்கோவாக் தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக மூக்குவழியாக எடுக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்துவதற்குதான் முறையான செவிலியர்கள் தேவை. ஆனால், மூக்கு வழி செலுத்தும் இந்த தடுப்பு மருந்தை செலுத்துவதற்கு பயிற்சி பெற்ற செவிலியர்கள் தேவையில்லை.
மத்திய அரசின் உயிரிதொழில்நுட்பப் பிரிவு, வாஷிங்டன் பல்கலைக்கழகம், செயின்ட் லூயிஸ், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவை இணைந்து மூக்குவழியே செலுத்தும், ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
துபாயில் இருந்து உத்தரப் பிரதேசம் திரும்பிய 2வது நபருக்கு கொரோனா தொற்று
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள பிபிவி154 எனும் மூக்குவழி செலுத்தும் தடுப்பூசிக்கு இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டுஅமைப்புகடந்த நவம்பரில் ஒப்புதல் அளித்தது. இதன்படி, அவசரத் தேவைக்காக மட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இப்போது முழுமையாக தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஊசியில்லா, மூக்குவழியே செலுத்தும் முதல் தடுப்பூசி பாரத் பயோடெக்கின் பிபிவி154 தடுப்பூசியாகும்.
கோவின் தளத்தில் தற்போது பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட், கோவோவேக்ஸ், ரஷ்யாவின் ஸ்புட்னிக்வி, பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. விரைவில் பாரத் பயோடெக்கின் பிபிவி154 தடுப்பூசியும் பட்டியலிடப்படும்.