BF 7 Variant: இந்தியா முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் இடங்களில் மாதிரி பயிற்சி துவக்கம்!!

By Dhanalakshmi GFirst Published Dec 27, 2022, 12:03 PM IST
Highlights

மாநிலங்களில் நடத்தப்படும் இந்த மாதிரி பயிற்சிகளை அந்தந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மேற்கொள்வார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார். 

சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியா எந்தளவிற்கு தடுப்பு நடவடிக்கைகளில் தயாராக இருக்கிறது என்பதை கண்டறிவதற்காக, இன்று நாடு முழுவதும் கொரோனா மாதிரி பயிற்சி நடந்து வருகிறது.  

மாநிலங்களில் நடத்தப்படும் இந்த மாதிரி பயிற்சிகளை அந்தந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மேற்கொள்வார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார். 

இதற்கு முன்னதாக நேற்று டெல்லியில் இந்திய மருத்துவக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இருந்த மன்சுக் மாண்டவியா பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், ''இதுபோன்ற மாதிரி பயிற்சிகள் எந்த இடத்தில், இன்னும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு உதவியாக இருக்கும். மக்களுக்கான சுகாதாரம் சார்ந்த தேவைகளை தயார் நிலையில் வைத்திருக்க உதவும்'' என்று தெரிவித்து இருந்தார்.

இந்தியா மூன்று முறை கொரோனா தொற்று பரவலை சந்தித்துவிட்டது. தற்போது நான்காவது முறையாக கொரோனா தொற்றை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே நான்கு பேருக்கு தொற்று ஏற்பட்டு குணமடைந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இவர்களுக்கு கொரோனா திரிபு வைரஸான BF 7 பரவி இருந்தது பரிசோதனையில் தெரிய வந்தது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவக் கூடும் என்று கூறப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்றைய மாதிரி பயிற்சி மூலம் அனைத்து மாவட்டங்களும் மருத்துவ அவசரகால தேவையை பூர்த்தி செய்யப்படும் நிலையில் இருக்கிறதா? தனிமைப்படுத்தலுக்காக மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றனவா? ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பில் இருக்கிறதா? போதிய ஐசியு படுக்கைகள் இருக்கின்றனவா? வென்டிலேட்டகள் அவசர சூழ்நிலையை சமாளிக்கும் அளவிற்கு இருக்கிறதா? என்பது குறித்து அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

Telangana | Mock drill, to check covid preparedness, being conducted at Gandhi Hospital in Hyderabad.

We are checking our preparedness, if at all, covid cases increase in the state: Supt Raja Rao pic.twitter.com/9n8fzREbk7

— ANI (@ANI)

 

மேலும், பயிற்சி அளிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களை தயார்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று மாதிரி பயிற்சி நடத்தப்பட வேண்டும் என்று கடந்த வாரம் சுகாதாரத்துறை செயலாளர் ராகேஷ் பூஷன் மாநிலங்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதை முன்னிட்டு, அவசரகால மருந்துகளை வாங்குவதற்கு 104 கோடி ரூபாயை டெல்லி அரசாங்கம் ஒதுக்கி இருக்கிறது. 

J&K | Mock drill to ensure Covid management preparedness is conducted at (MCH) Hospital, Gandhi Nagar in Jammu. pic.twitter.com/fatuRKj33V

— ANI (@ANI)

 

இதை முன்னிட்டு பேட்டியளித்து இருந்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், ''தமிழ்நாட்டில் நெரிசல் நிறைந்த இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கோவிட் கட்டுப்பாடுகள் மாநிலத்தில் நீக்கப்படவில்லை'' என்று தெரிவித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று ஐதராபாத்தில் இருக்கும் காந்தி மருத்துவமனையிலும், ஜம்முவில்  காந்தி நகரில் இருக்கும் எம்சிஹெச் மருத்துவமனையிலும் மாதிரி பயிற்சி நடத்தப்பட்டது.

click me!