Indian Army: இடுப்பளவு பனியில் சிக்கினாலும் புன்னகையுடன் கடந்து சென்ற ராணுவ வீரர்! நெட்டிசன்கள் பாராட்டு மழை

By Pothy RajFirst Published Dec 27, 2022, 2:50 PM IST
Highlights

சர்வதேச எல்லையில், இமயமலை பனிமலைப்பகுதியில் இடுப்பளவு பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டபோதும், புன்னகையுடன் கடந்து சென்ற இந்திய ராணுவ வீரருக்கு நெட்டிசன்கள் பாராட்டு மழையில் நனையவைத்துள்ளனர்.

சர்வதேச எல்லையில், இமயமலை பனிமலைப்பகுதியில் இடுப்பளவு பனிப்பொழிவில் சிக்கிக்கொண்டபோதும், புன்னகையுடன் கடந்து சென்ற இந்திய ராணுவ வீரருக்கு நெட்டிசன்கள் பாராட்டு மழையில் நனையவைத்துள்ளனர்.

இந்திய ராணுவ வீரர்கள் எல்லைப்பகுதியில் எத்தகைய சூழல் நிலவியபோதிலும் அது பனிமழை, மழை, ரத்தத்தை உறைய வைக்கும் குளிர், வெயில் இருந்தபோதிலும் தேசத்தைக் காக்கும் பொருட்டு காவல் காக்கிறார்கள். அவரின் துணிச்சலையும், தியாகத்தையும், தீரத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

பாரத் பயோடெக்கின் மூக்குவழி(nasal) செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலை வெளியீடு

அவ்வாறு ஒரு ராணுவ வீரர் பனிப்பொழிவில் இடுப்பளவு பனியில் சிக்கிக்கொண்டார். அந்த பனிஇடுக்கில் இருந்து மிகுந்த சிரமப்பட்டு வெளியேவந்தாலும், சிறிய புன்னகையுடன் கடந்து சென்ற வீடிய வைரலாகியுள்ளது. ரத்தத்தை உறைய வைக்கும் பனியில் குடும்பத்தை, மனைவி, குழந்தைகளைப் பிரிந்து பணியாற்றுகிறோமே என்ற கவலை சிறிதும் இல்லாமல் இன்முகத்தோடு அந்த இடத்திலிருந்து அந்த வீரர் சென்றார்.

 

Notice the smile on face of this young soldier 🇮🇳 pic.twitter.com/emejbSmbNP

— Maj Gen Raju Chauhan, VSM (veteran)🇮🇳 (@SoldierNationF1)

இடுப்பளவு பனியில் சிக்கினாலும் அதிலிருந்து அனாசயமாக மீண்டுவந்து, முன்னோக்கி நடந்து சென்ற இந்திய வீரரின் தீரத்தையும், உடல்வலிமையையும் இணையத்தில் பார்ப்பவர்கள் புகழ்ந்து வருகிறார்கள். 
மேஜர் ஜெனரல் ராஜூ சவுகான் இந்தவீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சிக்கிம் விபத்தில் உயிரிழந்த பாலக்காடு ராணுவ வீரர்… கோவை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட உடலுக்கு ராணுவ மரியாதை!

இந்த வீடியோயைப் பார்த்த நெட்சின்கள், அந்த வீரருக்கு சல்யூட் செய்தும், பாராட்டுக்களைக் கூறியும், தேசப்பற்றைக் கூறியும் புகழ்ந்து வருகிறார்கள். அந்த வீடியோவில் “ இந்த இளம் வீரரின் முகத்தில் எழும்புன்னகையைப் பாருங்கள்” என்று மேஜர் ஜெனரல் ராஜூ சவுகான் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை 77 ஆயிரம் பேரால் இதுவரை பார்க்கப்பட்டுள்ளது.
 

click me!