Aero India 2023: 14-வது விமான மற்றும் பாதுகாப்பு தொடர்பான Aero இந்தியா கண்காட்சி: பிரதமர் மோடி இன்று தொடக்கம்

By Pothy Raj  |  First Published Feb 13, 2023, 10:22 AM IST

நாட்டின் மிகப்பெரிய விமானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான 14-வது கண்காட்சி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா முழுவத்துக்கு வலு சேர்த்து கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.


நாட்டின் மிகப்பெரிய விமானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான 14-வது கண்காட்சி இன்று பெங்களூருவில் தொடங்குகிறது. பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா முழுவத்துக்கு வலு சேர்த்து கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் தொடர்பான கண்காட்சியாக இது பார்க்கப்படுகிறது. 

அது மட்டுமல்லாமல் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஆதரிக்கும் வகையில் கண்காட்சி இருக்கும்.

Tap to resize

Latest Videos

கர்நாடக மாநிலத்தில் அடுத்த இரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கஇருக்கும் நிலையில் பிரதமர் மோடி 3வது முறையாக பெங்களூருவுக்கு வருகிறார். இந்த கண்காட்சியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்க உள்ளார்.

2024க்குள் ரூ.25,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதியை எட்ட இலக்கு... ராஜ்நாத் சிங் தகவல்!!

பெங்களூருவில் 5 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும், உலகளவில் பல்வேறு விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தும்.

ஏறக்குறைய 809 நிறுவனங்கள், இதில் 110 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. பெங்களூருவில் உள்ள ஏலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் இந்த கண்காட்சி நடக்க உள்ளன. 

மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க நிறுவனங்கள் சார்பாக, இந்தியாவுக்கா அமெரிக்கத் தூதர் எலிசபெத் ஜோன்ஸ் பங்கேற்கிறார். அவர் கூறுகையில் “ இந்தியா தனது படைப்பிரிவை நவீனமயமாக்கியுள்ளது, இந்த நேரத்தில் இந்தியாவுடன் நாம் உறுதியான நட்புறவை கொண்டிருக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, மேம்பாட்டு கூட்டு அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

சர்வதேச அளவில் நடக்கும் உலகளாவிய விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கான கண்காட்சி என்பதால், 35ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் தயாரிப்புகள், திறன், பொருட்கள், சேவைகளை விளக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் டிஆர்டிஓ  உருவாக்கிய, நடுத்தத் தொலைவு பறக்கக்கூடிய ஆள்இல்லா விமானம் தபாஸ்-பிஎச் ஆகியவையும் கண்காட்சியில் இடம் பெற உள்ளது.

டிஆர்டிஓ கூறுகையில் “ தபஸ்(TABAS) கண்காணிப்பு உளவு விமானம் என்பது, உளவு, கண்காணிப்பு மற்றும் இலக்கை அடைதலில் முக்கியப் பங்காற்றும். 28ஆயிரம் அடி உயரம்வரை பறக்கம் திறன் கொண்டது, 18மணிநேரம் செயல்படும். 350 கிலோ அளவு சுமக்கும் முதல் விமானமாகும்” எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்பு(டிஆர்டிஓ), 12 மண்டலங்களில் இருந்து 330 பொருட்களைக் காட்சிப்படுத்த உள்ளது. போர் விமானம், யுஏவி, ஏவுகணைகள், எஞ்சின், உளவு செயல்முறைக் கருவிகள், நீர்வழி கருவிகள், சென்சார்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்த உள்ளது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடட் நிறுவனம், உள்நாட்டில் தயாரித்த அனைத்து வகையான லகுரக ஹெலிகாப்டர்களையும், பிரசந்த் என்ற இலகு ரக ஹெலிகாப்டரையும் காட்சிப்படுத்த உள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கண்காட்சியில் பங்கேற்று முதல்நாளான இன்று சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களுடன் பாதுகாப்பு தொடர்பாக பேச உள்ளார்.

வானம் எல்லை அல்ல, வாய்ப்புகள் எல்லைகள் கடந்தும் உள்ளன என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய நிறுவனங்களின் தலைவர்கள், மத்திய அரசு, வெளிநாட்டு நிறுவனங்கள்ஆலோசிக்கின்றன

பிரதமரின் பிளாஸ்டிக் ஜாக்கெட்டை வடிவமைத்த தமிழக இளைஞர்

26 நாடுகளின் நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள், குறிப்பாக போயிங், லாக்கிட் மார்டின், இஸ்ரேல் ஏரோ்ஸபேஸ் இன்டஸ்ட்ரீஸ், ஜெனரல் ஆட்டோமிக்ஸ், லீப்ஹெர் குழுமம், ரேதியான் டெக்னாலஜிஸ், சப்ரான், காமி உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இது தவிர இந்தியா சார்பில் பாரத் ஹெவிஎலெக்ட்ரானிக்ஸ்,  பாரத் டைனமிக்ஸ் லிமிட்டட், பிஇஎம்எல் லிமிடட், மிஸ்ராதத்து நிகம் லிமிடட் பங்கேற்கின்றன

click me!