அலறும் வடகிழக்கு மாநிலங்கள்.. நேற்று அசாம், இன்று சிக்கிம்.. அப்படினா அவங்க சொன்னது நடந்துடுமோ?

Published : Feb 13, 2023, 09:25 AM ISTUpdated : Feb 13, 2023, 09:28 AM IST
அலறும் வடகிழக்கு மாநிலங்கள்.. நேற்று அசாம், இன்று சிக்கிம்.. அப்படினா அவங்க சொன்னது நடந்துடுமோ?

சுருக்கம்

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவரை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டு கட்டு போல் சரிந்து தரைமட்டமாகின. இதனிடையே, துருக்கியை தொடர்ந்து இந்தியாவை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவரை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டு கட்டு போல் சரிந்து தரைமட்டமாகின. இதனிடையே, துருக்கியை தொடர்ந்து இந்தியாவை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று அசாமின் நாகோன் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4ஆக பதிவாகி இருந்தது. நில அதிர்வால், உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்ட12 மணி நேரத்தில் மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.15 மணிக்கு சிக்கிம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.3ஆக பதிவாகியிருந்தது. 

இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் அதிகாலை அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்