2024க்குள் ரூ.25,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதியை எட்ட இலக்கு... ராஜ்நாத் சிங் தகவல்!!

By Narendran S  |  First Published Feb 12, 2023, 8:42 PM IST

2024 ஆம் ஆண்டுக்குள் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 


2024 ஆம் ஆண்டுக்குள் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் ஏரோ இந்தியா 2023 நிகழ்வை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டு பேசுகையில், ஒரு துடிப்பான மற்றும் உலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு பாதுகாப்புத் துறையை உருவாக்குவதே மத்திய அரசின் குறிக்கோள்.

இதையும் படிங்க: துருக்கி, சிரியாவை தொடர்ந்து அசாமிலும் நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு!!

Tap to resize

Latest Videos

இதன் மூலம் நாம் பாதுகாப்பிலும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தன்னம்பிக்கையை அடைய முடியும். இந்த பாதையில் முன்னேற ஏரோ இந்தியா 2023 உதவும்.  சுமார் 100 நட்பு நாடுகள் மற்றும் 800 கண்காட்சியாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர். ஏரோ இந்தியா 2023 ஒரு பெரிய நிகழ்வாக இருக்கும் என்று நாங்கள் கற்பனை செய்தோம். ஆனால் அது இன்னும் பிரமாண்டமான நிகழ்வாக உருவெடுத்துள்ளது. இந்த ஏரோ ஷோ இதுவரை நடந்த மிகப்பெரிய நிகழ்வாகும்.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்… டிவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு!!

ஏரோ இந்தியா கண்காட்சியில் எதிர்காலத்தின் சிறகுகள் என்ற கருப்பொருளைக் கொண்ட இந்தியா பெவிலியன் நிகழ்வின் மையமாக இருக்கும். இந்த பெவிலியன் புதிய இந்தியாவின் சாத்தியங்கள், வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும். பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்ய நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். 2024ஆம் ஆண்டுக்குள் ரூ.25,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதியை எட்டுவதே எங்களது இலக்கு என்று தெரிவித்துள்ளார். 

click me!