தமிழகத்தைப் பின்பற்றி பாஜகவும் கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
திரிபுராவில் கல்லூரிக்குச் செல்லும் அனைத்து பெண்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் ‘அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த திட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்குவதற்காக ரூ.25 ஆயிரம் அல்லது ஸ்கூட்டர் விலையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
undefined
இந்நிலையில், பாஜகவும் அதனைப் பின்பற்றி 2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது பெண்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்போவதாகக் கூறியது. இப்போது திரிபுராவிலும் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர் என்ற வாக்குறுதியை அளித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள திரிபுராவில் பாஜக தலைவர்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்கள். அம்மாநிலத்தின் செபாஹிஜாலா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்று பிரசாரம் செய்தார்.
அலறும் வடகிழக்கு மாநிலங்கள்.. நேற்று அசாம், இன்று சிக்கிம்.. அப்படினா அவங்க சொன்னது நடந்துடுமோ?
அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியும் முதல்வர் மானிக் சாஹாவும் மாநில திரிபுராவின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறார்கள். அதே சமயத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திப்ர மோதா கட்சிகளின் கூட்டணி மாநிலத்தில் மீண்டும் காட்டு ராஜ்ஜியத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உறுதியான உடனேயே அவர்கள் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும் அமைச்சர் அமித் ஷா கூறினார்.
மேலும் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்துப் பேசிய அவர், “திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும்” என அறிவித்தார்.
AeroIndia2023: புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் தவறவிடாது! பிரதமர் மோடி பெருமிதம்