Shashi Tharoor : congress:காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டி? ராகுல் காந்திக்கு எதிராக போட்டியா?

By Pothy RajFirst Published Aug 30, 2022, 12:50 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், சசி தரூர் எம்.பி. போட்டியிடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், சசி தரூர் எம்.பி. போட்டியிடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இறுதிமுடிவை இன்னும் சசி தரூர் எடுக்கவில்லை. அது தொடர்பான ஆலோசனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது குறித்து சசி தரூரிடம், பிடிஐ சார்பில் கேட்டபோது அவர்பதில் அளிக்க மறுத்துவிட்டார். இதனால், ராகுல் காந்திக்கு எதிராக சசி தரூர் தலைவர் பதவிக்காக களமிறங்குகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

பிரேசில் அமேசான் காட்டின் கடைசி மனிதரும் காலமானார்! பூர்வகுடிகள் இனி யாருமில்லை

தலைவர் பதவிக்கு போட்டியிடமாட்டேன் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மூத்த தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் ஒரே குரலாக ராகுல் காந்தி தலைவராக வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் , கேரளாவில் வெளியாகும் மாத்ரூபூமி நாளேட்டில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் தனது விருப்பங்களை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராகவும், கட்சித் தலைமைக்கு தேர்தல் வைக்க வேண்டும் என்று ஜி23 தலைவர்கள் கடிதம் எழுதினர். அந்த 23 தலைவர்களில் சசி தரூர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சசி தரூர் அந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதாவது:

அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி, மாநில காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் மூலம் முக்கிய பொறுப்புகளுக்கு யாரை நியமிக்கலாம், நம்பகமான தலைவரை தேர்ந்தெடுக்கவும் கட்சித் தலைமை அனுமதிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை புத்துணர்ச்சியுடன் வைப்பதற்கு இப்போது புதிய தலைவர் தேர்தல் தேவைப்படுகிறது. 

துணிச்சல் இருந்தால் பாஜக என்னை கைது செய்யட்டும்: தவறை உணர்வார்கள்’: மம்தா பானர்ஜி சவால்

தேர்தல் நடத்துவதால் நல்ல பலன்களும் கிடைக்கும். உதாரணமாக பிரிட்டனில் பிரிட்டிஷ் பழமைவாதக் கட்சிக்கு நடந்த தேர்தலில் போரிஸ் ஜான்ஸன், தெரஸா மே போன்றோருக்கு போட்டியாக 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பதை காண முடிந்தது.

ஆதலால் அதேபோன்று தேர்தலை வெளிப்படையாக நடத்தினால்தான் பலரும் போட்டியிடுவார்கள். தேச நலன்மீதான ஈர்ப்பை அதிகரிக்கும், காங்கிரஸ் கட்சியின் வெளிப்படைத்தன்மையால் இன்னும் அதிகமானோர் கட்சியில் இணைவார்கள்.

இந்த காரணத்தால் ஏராளமானோர் முன்வந்து வேட்பாளர்களாகப் போட்டியிட தங்களை பதிவு செய்ய வேண்டும். தங்களின் நோக்கங்களை, இலக்குகளை கட்சியிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்வது தேசத்துக்கான பொதுநலனைத் தூண்டும்.

காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை, நடப்புச் சிக்கல், தேசத்தின் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு யார் தலைவராக பொறுப்பேற்றாலும் காங்கிரஸ் தொண்டர்களையும், வாக்காளர்களையும் உற்சாகப்படுத்த வேண்டும் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத இரு இலக்குகளாகும்.

ncrb: suicides in india: தற்கொலையில் தமிழகம் 2வது இடம்: தேசியஅளவில் தினக்கூலிகள் அதிகம்: என்சிஆர்பி தகவல்

தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர் கட்சியில் சிக்கலைத் தீர்க்க திட்டம் இருக்க வேண்டும், தேசத்துக்கான நீண்டகால திட்டம் இருக்க வேண்டும். அரசியல் கட்சி என்பது தேசத்துக்கு சேவை செய்யும் கருவி அதற்கு முடிவு இல்லை. எதுவாகினும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவது பிரச்சினைகளைத் தீர்க்கும் வழியாகும். வரும் தலைவருக்கு இது கட்டாயமாகும். 

சமீபத்தில் கட்சியிலிருந்து பலர் வெளியேறிவிட்டார்கள். இந்த வெளியேற்றம் கட்சிக்கு ஊடகங்கள் வாயிலாக இரங்கல் செய்தியைத்தான் ஊகமாக வெளியிடுகிறது. சமீபத்திய தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட தோல்விகளாலும் தொண்டர்கள் மேலும் ஒருவிதமான மனச்சோர்வுடனே இருக்கிறார்கள்.

என்னுடைய சக நண்பர்கள் கட்சியிலிருந்து வெளியேறுவது உதவாது. அவர்கள் வெளியேற்றத்தால் தனிப்பட்ட ரீதியில் வருந்துகிறேன். அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து இருக்க வேண்டும், கட்சியை சீரமைத்திருக்க வேண்டும். 

இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு செப்டம்பர் 22ம் தேதியும், வேட்புமனுத்தாக்கல்  செப்டம்பர் 24 முதல் 30ம் தேதிவரை நடக்கும். தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19ம் தேதி அறிவிக்கப்படும்.

click me!