வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறும் பாஜக, துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்யட்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறும் பாஜக, துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்யட்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் சார்பில் நேற்று கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சீன போன்களின் விற்பனையை தடை செய்யும் திட்டம் இல்லை… மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளக்கம்!!
பாஜகவும் தொடர்ந்து இதுபோன்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அபிஷேக் பானர்ஜி, பிர்ஹத் ஹக்கிம் மற்றும் என்னைப் பற்றியும் அவதூறான பிரச்சானரங்களில் பாஜகவினர் ஈடுபடுகிறார்கள்.
நானும் எனது குடும்பத்தாரும் அளவுக்கு அதிகமான சொத்துக்களைச் சேர்த்துவிட்டதாக சிலர் புகார் கூறுகிறார்கள். என் உறவினர்கள் எல்லாம் தனித்தனியாக வசிக்கிறார்கள், என்னுடன் என் தாய் மட்டுமே இருக்கிறார். ஏதாவது பண்டிகை என்றால் மட்டுமே உறவினர்கள் ஒன்றுகூடுவோம்.
இங்கிருந்து கொண்டு ஏன் என் மீது வழக்குத் தொடர்கிறார்கள். சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருங்கள். நான் புத்தகம் எழுதி அந்த ஊதியத்தில் வாழ்கிறேன். கடந்த 12 ஆண்டுகளாக முன்னாள் எம்.பி. என்கிற முறையில் எனக்கு மாதம் ரூ.ஒரு லட்சம் ஓய்வூதியம் தரப்படுகிறது.
இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது… இந்து ஈழவர் சமூக தலைவர் கருத்தால் பரபரப்பு!!
முதல்வரானபின் எனக்கு ஊதியம் தரப்படுகிறது. நான் குடிக்கும் தேநீர் முதல் நான்தான் செலவிடுகிறேன். அரசு வாகனங்களை சொந்தப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில்லை. என் தந்தை எனக்கு வழங்கிய வீட்டில்தான் வசிக்கிறேன்.
என்னுடைய நேர்மையை சிதைக்க பாஜக முயல்கிறது, அதற்காக ஒவ்வொரு விஷயத்திலும் என்னுடைய பெயரை பாஜக இழுக்கிறது. துணிச்சல் இருந்தால் மத்தியில் ஆளும் பாஜக அரசு என்னைக் கைது செய்யட்டும். என்னை அவர்கள் கைது செய்தால் அதன்பின் தவறு செய்துவிட்டோம் என்று உணர்வார்கள்.
ஒவ்வொருவரையும் திருடர்கள் போல் பாஜக சித்தரிக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் திருடர்கள் போல் பாஜகவினர் பேசுகிறார்கள், பாஜகவினர் புனிதர்கள் என்று நினைக்கிறார்கள். நான் மட்டும் அரசியலில் இல்லாமல் இருந்தால், பாஜகவினர் நாக்கை கிழித்துவிடுங்கள் என்று என்னுடைய கட்சித் தலைவர்களிடம் கேட்டிருப்பேன்.
நாங்கள் சிபிஐ, அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை மதிக்கிறோம், அவர்கள் பணியை அவர்கள் செய்யட்டும். அதேசமயம், அமலாக்கப்பிரிவு, சிபிஐ, சிஆர்பிஎப், பிஎஸ்எப் அதிகாரிகள் மீதும் ஊழல் உள்ளிட்ட பல்வேறுவழக்குகள் நிலுவையில் இருப்பதை மறந்துவிடக்கூடாது.
எங்கள் மாநில போலீஸ் அதிகாரிகளை சிபிஐ, அமலாக்கப்பிரிவு சீண்டினால், நாங்களும் சிபிஐ, அமலாக்கப்பிரிவு மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்.
மத்தியில் ஆளும் பாஜக தனது பணத்தை எல்லாம் ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்புகிறது. 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்