Rahul Gandhi:Cambridge:'என்னுடைய செல்போனில்கூட பெகாசஸ்'!ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேச்சு

By Pothy RajFirst Published Mar 3, 2023, 3:01 PM IST
Highlights

ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது தீவிரவாதிகள் என்னைப் பார்த்தனர், நானும் பார்த்தேன் ஆனால் என்னைக் கொல்லவில்லை என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது தீவிரவாதிகள் என்னைப் பார்த்தனர், நானும் பார்த்தேன் ஆனால் என்னைக் கொல்லவில்லை என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒரு வாரப் பயணமாக கடந்த செவ்வாய்கிழமை பிரிட்டனுக்கு வந்துள்ளார். லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் ராகுல் காந்தி, இந்திய வம்சாவளியினருடன் கலந்தாய்வு நடத்துகிறார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

நான் ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்தேன். அப்போது எனக்குப் பாதுகாப்புஅளித்த பாதுகாப்பு வீரர்கள், இந்தப் பகுதியில் கவனமாக இருங்கள், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருக்கிறது என எச்சரித்தனர்.

ஆனால், நான் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நடைபயணத்தைத் தொடர்ந்தேன். அங்குள்ள என் மக்களிடம் பேசினேன், அவர்களிடம் இங்கு தொடர்ந்து நடக்க இருக்கிறேன் என்று தெரிவித்தேன். நாங்கள் தொடர்ந்து நடந்தபோது, அடையாளம் தெரியாத ஒருநபர் என்னை அணுகினார். என்னுடன் பேச விரும்புவதாக அந்தநபர் தெரிவித்தார்

அந்த நபர் என்னிடம் உண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் இங்கு வந்திருப்பது, மக்களிடன் குறைகளை காதுகொடுத்து கேட்கத்தானே வந்துள்ளார்கள் என்று கேட்டார். அதன்பின், சிறிது தொலைவில் சிலர் நிற்பதை அந்த நபர் என்னிடம் காண்பித்தார். அவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று  என்னிடம் அந்த நபர் தெரிவித்தார்

கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் ரூ.6 கோடி ரொக்கம் பறிமுதல்:லோக்ஆயுக்தா அதிரடி

ஏதோ சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என நான் நினைத்தேன். ஏனென்றால் தீவிரவாதிகள் என்னைக் கொலை செய்யவும் வாய்ப்பிருந்தது. ஆனால், அவர்கள் என்னைக் கொல்லவில்லை. ஏனென்றால், குறைகளை காதுகொடுத்து கேட்கும் சக்தியின் வெளிப்பாடு அது.

இந்த பல்கலைக்கழகத்தில் நான் பேச வந்திருப்பதை அடுத்தவர் சொல்வதை காது கொடுத்தும் கேட்கும் கலையைப்பற்றி பேசத்தான். இந்த சிந்தனையை , ஜனநாயகசூழலை உலகம் முழுவதும் பரப்பும். 
ஜனநாயக நாடுகளான இந்தியா, அமெரிக்காவில் தயாரிப்பு, உற்பத்தி சமீப ஆண்டுகளாக குறைந்துவிட்டது. அந்த உற்பத்தி சீனாவின்பக்கம் திரும்பிவிட்டது. இந்த மாறுதல் மிகப்பெரிய சமநிலையற்ற தன்மையை, கோபத்தை உண்டாக்கியுள்ளது, இதை அவசரமாகக்கருதி கவனம் செலுத்த வேண்டும்.

ஜனநாயகத்திற்குத் தேவையான நிறுவன கட்டமைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்திய அரசு பெகாசஸ் செயலி மூலம் என்னைக் கண்காணித்தது, எதிர்க்கட்சித் தலைவர்களை கண்காணித்தது. என் செல்போனில் பெகாசஸ் இருந்தது. ஏராளமான அரசியல் தலைவர்கள் செல்போனில் பெகாசஸ் இருந்தது. நான் செல்போனில் பேசும்போது கவனமாகப் பேசுங்கள் என்று கூறுவேன். 

இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. ஜனநாயகத்தை தாக்குதலில்இருந்து பாதுகாக்க நாங்கள் முயல்கிறோம். இந்திய அரசு நீதிமன்றத்தை, ஊடகத்தை கைப்பற்றி கட்டுப்படுத்துகிறது. கண்காணிக்கிறது, தூண்டிவிடுகிறது, சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. தலித்துகள், பழங்குடிகள்எதிர்ப்பை அடக்குகிறது

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்


 

click me!