காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
சர் கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் டிஎஸ் ராணா கூறுகையில் “ காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. இதயசிகிச்சை நிபுணர் மருத்துவர் அரூப் பாசு குழுவினர் மேற்பார்வையில் சோனியா காந்தி சிகிச்சையில் உள்ளார். அவரை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்