கடந்த 2018க்கு முன்பு இருந்ததைவிட, வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்விளைவாக சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 3 மாநிலங்களின் ஆட்சியிலும் பாஜகவால் அங்கம் வகிக்க முடிகிறது
கடந்த 2018க்கு முன்பு இருந்ததைவிட, வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்விளைவாக சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 3 மாநிலங்களின் ஆட்சியிலும் பாஜகவால் அங்கம் வகிக்க முடிகிறது
பாஜக ஆட்சி
undefined
கடந்த சில ஆண்டுகளில் மிசோரம் மற்றும் சிக்கம் மாநிலங்களைத் தவிர அருணாச்சலப்பிரதேசம், அசாம், மணிப்பூர் மற்றும் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகியவற்றில் பாஜக தனித்து ஆட்சியில் இருந்துவருகிறது, அல்லது கூட்டணியில் அரசில் பங்கு வகித்து வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டில் நடந்த தேர்தலில் மேன் ஆப்தி சீரிஸ்-ஆக பாஜக 3 மாநிலங்களிலும் தடம் பதித்துவிட்டது.திரிபுராவில் 2வது முறையாக ஆட்சி அமைக்கிறது, மேகாலயா,நாகலா்தில் மீண்டும் கூட்டணி ஆட்சியில் பாஜக பங்கேற்கிறது.
வடகிழக்கு மாநிலத்தில் வெற்றி பெற்றது இப்படிதான்... திரிவேணி ரகசியத்தை வெளியிட்ட பிரதமர் மோடி!!
கிறிஸ்தவர்கள்
இதில் குறிப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்றால், மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் மக்களில் 90 சதவீதம் கிறிஸ்தவர்கள். அவர்களுக்கு மத்தியில் தேசிய கட்சி, அதிலும் இந்துத்துவாவை தீவிரமாகத் தூக்கிப்பிடிக்கும் பாஜக வெற்றி பெற முடிந்தது வியப்புக்குரியதுதான்.
என்பிஇபி மற்றும் மேகாலயாவில் என்டிபிபி, திரிபுராவில் மக்கள் மத்தியில் பாஜக மிகப்பெரிய அபிமானத்தையும், நம்பி்க்கையையும் பெற்றுள்ளது என்பது வாக்கு சதவீதத்திலேயே தெரியவருகிறது. மேகாலயாவில் என்பிஇபி கட்சியும்,பாஜகவும் தனித்தே தேர்தலில் நின்றன. இருப்பினும் பாஜகவின் ஓட்டுசதவீதம் வளர்ந்துள்ளது.
திரிபுரா, நாகாலாந்தில் பாஜக அமோக வெற்றி… மேகாலயாவில் தொங்கு சட்டசபை!!
வாக்கு சதவீதம்
கடந்த 2013ல் மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுராவில் 2 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைத்தான் பாஜக பெற்றது. ஆனால், 2018ம் ஆண்டு தேர்தலில் மேகாலயாவில் 10%, நாகாலாந்தில் 15%, திரிபுராவில் 44% வாக்குகளை பாஜக வென்றுள்ளது.
2023 தேர்தலில் இந்த மாநிலங்கள் அனைத்திலும் பாஜக தனது வாக்கு சதவீதத்தை குறையவிடாமல் தக்கவைத்துள்ளது. நாகாலாந்தில் பாஜக வாக்கு சதவீதம் 4% அதிகரித்துள்ளது. திரிபுராவில் 5% வாக்கு குறைந்தாலும் பாஜக ஆட்சியைப் பிடித்துவிட்டது.
வெற்றிக்கான காரணம்
வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள் மேம்பாட்டுத் திட்டங்கள், மக்கள்நலத் திட்டங்கள், மக்கள், மோடி மேஜிக் ஆகியவைதான். இந்த வடகிழக்கு பிராந்தியத்தில் பாஜகவின் வெற்றிக்கு வளர்ச்சிப் பணிகளும், சமூக நலத்திட்டங்களும் முக்கியக் காரணங்களாகும்.
தேர்தல் முடிந்த 3 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்தியாடுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில்கூட மக்கள் தங்கள் மாநில மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்கு வாக்களிப்போம் எனத் தெரிவித்திருந்தார்கள். எந்த அரசின் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் அதிகமாகப் பயன் அடைந்தார்களோ அந்தக் கட்சிக்கு வாக்களித்தனர்.
மேகாலயாவில் தொங்கு சட்டசபையா? கான்ராட் சங்மா யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு?
மேம்பாட்டுப் பணிகள்
இந்த 3மாநிலங்களிலும் பாஜக தனித்தோ அல்லது பிராந்தியக் கட்சியுடன் கூட்டணி அமைத்தோ அதிகாரத்துக்குவந்துவிட்டது. இதே நிலைதான் அசாம் மாநிலத்திலும் நிலவுகிறது. அந்த மாநிலத்தில் பாஜக அரசு செய்த நலத்திட்டங்கள், மேம்பாட்டுப்பணிகள், குறிப்பாக இலவச ரேஷன் திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது
தேர்தல் முடிந்த வடகிழக்கில் உள்ள 3 மாநிலங்களிலும் இளம் ஆண், பெண் வாக்காளர்கள் மற்ற கட்சிகளைவிட பாஜகவுக்கு அதிகளவு ஆதரவுஅளித்துள்ளனர்.
பெண்கள் ஆதரவு
திரிபுராவில் உள்ள பெண் வாக்காளர்களில் பாதிக்கும்மேல், பாஜகவுக்கு ஆதரவாகஇருப்பதாக இந்தியாடுடேசர்வேயில் தெரியவந்துள்ளது.ஆண்கள் மத்தியில் 41%, பெண்கள் மத்தியில் 49% ஆதரவைபாஜக பெற்றுள்ளது.
நாகாலாந்தில் பாஜக-என்டிபிபி கூட்டணிக்கு 47% ஆதரவு பெண்கள் மத்தியில் இருந்துள்ளது, எதிர்க்கட்சியான நாகா மக்கள் முன்னணிக்கு 33% மட்டுமே இருந்தது.
மோடி மேஜிக்
3வது முக்கிய காரணம் மோடி மேஜிக். பிரதமர் மோடியின் பேச்சுக்கலை மட்டுமல்ல, அவரின் புகழ், நிர்வாகத்திறன், அமித் ஷா மூலம் வடகிழக்கில் பாஜகவை வலுப்படுத்தியது முக்கியமானது. ஹிமாந்தா பிஸ்வாஸ் ஷர்மாவுக்கு அதிகமான அதிகாரம் அளித்து என்இடிஏ-வை வழிநடத்த வைத்ததன் மூலம் பாஜகவால் வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்களில் 6ல் ஆட்சியில் அமரமுடிந்தது.
வடகிழக்கு மாநிலங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை பாஜக அரசுஅதிகப்படுத்தியது, சாலைகள், ரயில்போக்குவரத்து, விமானப் போக்குவரத்து போன்றவற்றை உருவாக்கியது மக்கள் மத்தியில் பாஜகவுக்கான இடத்தை இன்னும் விசாலமாக்கியது. இந்த மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்தபோதிலும் பாஜகவால் பெரும்பான்மை மக்கள் மனங்களை வெல்ல முடிந்திருக்கிறது