கர்நாடக பாஜக எம்எல்ஏ மாடல் விருப்பாக்சப்பாவின் மகனும் அரசு அதிகாரியான பிரசாந்த் குமார், தந்தைக்குப் பதிலாக தான் ரூ.40லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக் ஆயுக்தா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக பாஜக எம்எல்ஏ மாடல் விருப்பாக்சப்பாவின் மகனும் அரசு அதிகாரியான பிரசாந்த் குமார், தந்தைக்குப் பதிலாக தான் ரூ.40லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக் ஆயுக்தா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. இதில் தேவங்கெரே மாவட்டத்தில் சன்னகிரி தொகுதி எம்எல்ஏ விருப்பாக்சப்பா. கர்நாடக அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் தயாரிக்கும் மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் தலைவராக விருப்பாக்சப்பா உள்ளார்.
undefined
திரிபுரா, நாகாலாந்தில் பாஜக அமோக வெற்றி… மேகாலயாவில் தொங்கு சட்டசபை!!
கர்நாடக எம்எல்ஏ விருப்பாக்சப்பா மகன் பிரசாந்த்குமார். பிரசாந்த் குமார் கடந்த 2008ம் ஆண்டு கர்நாடக அரசுப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது, பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு பிரிவில் தலைமை கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்துக்கு கச்சாப் பொருட்களை சப்ளை செய்யும் ஒப்பந்தம் வழங்க கான்ட்ராக்டரிடம் ரூ.81 லட்சம் லஞ்சமாக பிரசாந்த் குமார் கேட்டிருந்தார்.
இதையடுத்து,அந்த ஒப்பந்ததாரர் லோக்ஆயுக்தா அதிகாரிகளிடம் கடந்த வாரம் புகார் செய்தார். இதையடுத்து, பிரசாந்த் குமாரை பொறிவைத்துப் பிடிக்க லோக்ஆயுக்தா அதிகாரிகள் முடிவு செய்தனர்.
நாகாலாந்தில் நசுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி: ஒரு இடம் கூட இல்லை!
இந்நிலையில் நேற்று மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்துக்கு ஒப்பந்ததாரர் பணத்தைக் கொண்டு சென்று பிராசந்த் குமாரிடம் வழங்கியபோது, லோக்அயுக்தா அதிகாரிகளிடம் சிக்கினார். அந்தஅலுவலகத்தில் இருந்து 3 பைக்களில் ரூ.40 லட்சத்தை லோக்ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
லோக்ஆயுக்தா அதிகாரிகள் கூறுகையில் “ மைசூர் சாண்டல் நிறுவனத்தின் தலைவர் எம்எல்ஏ விருப்பாக்சப்பாவுக்குப் பதிலாக அவரின் மகன் பிராசந்த் குமார் லஞ்சம் வாங்கியபோது கையும்களவுமாகப் பிடிபட்டார். பணம் பெற்ற பிரசாந்த் குமார், அவரின் தந்தை எம்எல்ஏ விருப்பாக்சப்பா இருவரும் குற்றவாளிகள்” எனத் தெரிவித்தனர்.