மூன்று மாநிலங்களில் கிடைத்து இருக்கும் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்து இருக்கும் பிரதமர் மோடி, பாஜகவின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு பாஜக ஆட்சி செய்த நிர்வாகங்களின் திறன், பணி கலாச்சாரத்தின் திரிவேணி மற்றும் ஊழியர்களின் சேவைக்கான அர்ப்பணிப்பு என்று புகழ்ந்து இருக்கிறார்.
மூன்று மாநிலங்களில் கிடைத்து இருக்கும் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்து இருக்கும் பிரதமர் மோடி, பாஜகவின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு பாஜக ஆட்சி செய்த நிர்வாகங்களின் திறன், பணி கலாச்சாரத்தின் திரிவேணி மற்றும் ஊழியர்களின் சேவைக்கான அர்ப்பணிப்பு என்று புகழ்ந்து இருக்கிறார். பாஜகவைப் பார்த்து சிறுபான்மையினர் பல ஆண்டுகளாக பயந்து வருகின்றனர் என்ற மாயை உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால், கோவாவில் இருந்து தற்போது வடகிழக்கு மாநிலங்கள் வரை அந்த மாயை உடைக்கப்பட்டுள்ளது என்று திரிபுரா, நாகாலாந்து, மேகாலாயா வெற்றிக்குப் பின்னர் பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கோவில் திருவிழாவில் பக்தர்களை சிதறி ஓடவிட்ட கோவில் யானை
டெல்லியில் இருக்கும் பாஜக தலைமையகத்தில் அவர் ஆற்றிய உரையில் தன் மீதான தனிப்பட்ட தாக்குதலையும் குறிப்பிட்டு பேசினார். அதில், நாட்டில் இருக்கும் சிலர் என்னை மர் ஜா மோடி (செத்துப் போ மோடி) என்று கூறுகின்றனர். ஆனால், இந்த நாடு மத் ஜா மோடி (போகாத மோடி) என்று கூறுகின்றனர்'' என்று கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ''நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் அதே வேளையில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சியுடன் மீண்டும் கைகோர்ப்போம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: உலக மக்கள் அனைவரும் பிரதமர் மோடியை நேசிக்கிறார்கள்... இத்தாலி பிரதமர் மெலோனி புகழாரம்!!
திரிபுரா வெற்றிக்குப் பின்னர் பிரதமர் செய்திருந்த டுவிட்டர் பதிவில், "நன்றி திரிபுரா! இது முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாக்கு. திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாஜக தனது ஒத்துழைப்பைக் கொடுக்கும். வெற்றிக்கு பாடுபட்ட திரிபுரா மாநிலத்தின் பாஜக அடிமட்ட தொண்டர்கள் உழைப்பைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார். நாகாலாந்து குறித்து தனது பதிவில், "இரட்டை இஞ்சின் அரசு மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைக்கும். இந்த முடிவை உறுதி செய்த எங்கள் கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: திரிபுரா, நாகாலாந்தில் பாஜக அமோக வெற்றி… மேகாலயாவில் தொங்கு சட்டசபை!!
மேகாலயா குறித்த தனது பதிவில், ''மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்த தனது கட்சி தொடர்ந்து கடினமாக உழைக்கும். சட்டசபை தேர்தலில் மேகாலயா பாஜகவை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. மேகாலயாவின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தவும், மாநில மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தவும் தொடர்ந்து கடினமாக உழைப்போம். அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு எங்கள் கட்சித் தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று மோடி தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று மாநில மக்களுக்கும் தனது நன்றியை ட்வீட் மூலம் தெரிவித்து இருக்கிறார்.
Speaking from HQ. https://t.co/mZmECGZkzm
— Narendra Modi (@narendramodi)