இதை மீறினால் 10 ஆயிரம் அபராதம்.. வாகன ஓட்டிகளே உஷார்.!

Published : Jul 11, 2022, 07:13 PM IST
இதை மீறினால் 10 ஆயிரம் அபராதம்.. வாகன ஓட்டிகளே உஷார்.!

சுருக்கம்

நாடு முழுவதும் வாகனங்களில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் என்பது ஒரு வாகனம் வெளியேற்றும் புகையை சரிபார்த்து, வாகனத்தின் உமிழ்வு அளவுகள் தர மதிப்பீட்டிற்கு ஏற்ப இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வழங்கப்படுகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் செல்லும் வாகனங்களில் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறாமல் வாகனங்களை ஓட்ட கூடாது என்பதால் அதற்கான இயக்கத்தை போக்குவரத்து துறை தீவிரப்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் 13 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 3 லட்சம் கார்கள், 17 லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் உரிய மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் பெறாமல் இயங்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் அது குறித்து போக்குவரத்து துறை எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ், குறிப்பிட்ட காலக்கெடுவுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. 

மேலும் காலாவதியான வாகன உரிமையாளர்கள் மாசு குறித்த சோதனைகளை மீண்டும் மேற்கொண்டு சான்றிதழ் பெற வேண்டும். அப்படி பெறாமல் இருக்கும் வாகன உரிமையாளர்களின் விலாசங்களுக்கு நோட்டீஸ் செயல்முறைக்கான பணிகளை அரசு தொடங்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. அடுத்த பிளான் ரெடி.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார் கமல்ஹாசன்.! எதற்கு தெரியுமா?

மேலும், அவ்வாறு சான்றிதழ் வைத்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அல்லது சான்றிதழ் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட மோட்டார் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாங்க உதவி செஞ்சிருப்போம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன சீக்ரெட்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!