தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாப்பு நாயுடு நேற்று அதிகாலை நந்தியால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நந்தியால் சரக டிஐஜி ரகுராமி ரெட்டி மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தலைமையிலான போலீஸார், அதிகாலை 3 மணியளவில் நகரத்தில் உள்ள ஆர்.கே. ஃபங்ஷன் ஹாலில் உள்ள சந்திரபாப்பு நாயுடுவின் முகாமுக்குச் சென்று கைது
செய்ய முயன்றனர்.
ஆனால், அங்கு திரண்டிருந்த அவருடைய ஏராளமான தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், அவரை கைது செய்யவிடாமல் காவல்துறையினருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சந்திரபாப்பு நாயுடுவை பாதுகாக்கும் SPG படைகள் கூட, விதிகளின்படி அதிகாலை 5.30 மணி வரை அவரை பார்க்க யாரையும் அனுமதிக்க முடியாது என்று கூறி போலீஸாரை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவழியாக, காலை 6 மணியளவில், போலீசார் சந்திர பாபு நாயுடுவின் வாகனத்தின் கதவுகளைத் தட்டி, அவரை கீழே இறக்கி கைது செய்தனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 50 (1) (2) இன் கீழ் 120(8), 166, 167, 418, 420, 465, 468, 471, 409 உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுவதாக போலீஸார் சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று சுமார் 7 மணி நேரம் நடந்த வாதங்களுக்குப் பிறகு, சந்திரபாபு வழக்கில் ஏசிபி நீதிமன்றம் தனது முடிவை அறிவித்தது. விஜயவாடா ஏசிபி நீதிமன்ற நீதிபதி ஹிமாபிந்து வழங்கிய தீர்ப்பின்படி, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் சந்திரபாபுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஏசிபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விரைவில் ராஜமுந்திரி மத்திய சிறைக்கு மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் ஆன சந்திரபாபு நாயுடு அவர் முதல்வராக பணியாற்றி வந்த காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக இந்த வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவருடைய ஆட்சி காலத்தின் போது புதிய ஐடி நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கிய வகையில் சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் அவர் பெற்றதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே இது சம்பந்தமான வழக்கில் சந்திரபாபு நாயுடு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கலாச்சார பாதை முதல் டிஜிட்டல் இந்தியா வரை: ஜி20 உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களைக் கவர்ந்த அம்சங்கள்