இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோ பதிவு செய்து பிரபலமானவராக வளம் வந்த சௌமியா ஷெட்டியை நகை திருட்டு வழக்கில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் தொண்டபர்த்தி பகுதியில் பாலாஜி மெட்ரோ ரெசிடென்சி பிளாட் எண் 102ல் ஓய்வு பெற்ற பிரசாத் பாபு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கடந்த மாதம் 23ம் தேதி பீரோவில் இருந்த 1 கிலோ 750 கிராம் எடையுள்ள தங்க நகைகள் திருடு போனதாக வீட்டின் உரிமையாளர் பிரசாத் பாபு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து விசாகப்பட்டினம் குற்றப்பிரிவு டிஜிபி வெங்கடரத்தினம் தலைமையில் ஏடிசிபி கங்காதர் மற்றும் காவல் துறையினர் பிரசாத்பாபு வீட்டில் பீரோவில் பதிவான கைரேகைகளை தடவியல் குழுவினர் சேகரித்தனர்.
மேலும் குடியிருப்பின் வெளியே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பிளாட் உரிமையாளர் ஜனபால பிரசாத்பாபுவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சமீபத்தில் வீட்டிற்கு வந்து சென்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் 11 பேர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் 2 தனிப்படை அமைத்து 11 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்களில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
கோபாலப்பட்டினத்தைச் சேர்ந்த சௌமியாஷெட்டி இன்ஸ்டாவில் வீடியோக்கள் ரீல்ஸ் பதிவு செய்வது மூலம் புகழ் பெற்று இரண்டு சினிமா படங்களில் நடித்துள்ளார். அவ்வாறு அறிமுகமான ஜனபால பிரசாத்தின் மகள் மௌனிகாவுடன் சௌமியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. மெளனிகாவுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்ட பிறகு, அவர்களுடன் 8 ஆண்டுகள் உண்மையாக இருப்பதாக நடித்து மௌனிகாவின் வீட்டிற்கு அடிக்கடி செல்வதை செளமியா வழக்கமாக கொண்டு வந்துள்ளார். நேராக படுக்கையறைக்குச் சென்று அங்குள்ள குளியல் அறைகளையும் பயன்படுத்தி வந்துள்ளார்.
அவ்வாறு குளியல் அறைக்கு செல்லும்போது மெளனிகா வீட்டின் படுக்கறை கதவுகளை மூடிகொண்டு சென்று குளியல் அறைக்கு செல்வார். ஒவ்வொரு முறையும் செல்லும்போது பல மணிநேரம் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வீட்டில் நகை, பிரோ சாவி எங்கு இருக்கும் என அனைத்தும் தெரிந்து வைத்திருந்தார். அவ்வாறு கடந்த ஜனவரி 29, பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில் மெளனிகா வீட்டிற்கு சென்ற செளமியா படுக்கை அறையில் உள்ள பிரோவில் இருந்து தங்க நகைகளை சிறுது சிறிதாக அவர்களுக்கு தெரியாமல் கொண்டு சென்றுள்ளார்.
அவ்வாறு சுமார் 1 கிலோ தங்க ஆபரணங்களை திருடி சென்றார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி யலமஞ்சிலியில் நடக்கும் உறவினர் திருமணத்திற்காக மௌனிகாவின் குடும்பத்தினர் செல்ல இருந்தனர். இதற்காக பீரோவில் நகைகளுக்கான லாக்கர் திறந்து பார்த்தபோது அதில் நகைகளை காணமல் போனதை பார்த்து போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து செளமியா கோவாவில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். ஆனால் அவரிடமிருந்து 74 கிராம் தங்கத்தை மட்டுமே போலீசார் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள தங்கத்தை மீட்க போலீசார் முயன்று வருகின்றனர். ஆனால் வலுக்கட்டாயமாக கேட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை செளமியா மிரட்டுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். ரீல்ஸ் மூலம் பிரபலமடைந்த சௌமியா சினிமா பட வாய்ப்புகளை பெற்று முன்னேறும் நிலையில் திருட்டு புத்தியால் போலீசில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டது.