தெலங்கானா மாநிலம் நம்பள்ளியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருக்கும் மல்லேப்பள்ளியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பாதாள அறையில் ரசாயன டிரம்கள் சேமிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று தீயணைப்பு வாகனங்கள் தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்தது எப்படி?
ரசாயன குடோனில் அதிக அளவு எண்ணெய் மற்றும் இதர எண்ணெய் கழிவுகள் தேங்கி இருந்துள்ளது. அங்கு ஒரு கார் பழுது பார்க்கும் போது, தீக்குச்சிகள் பறந்து எண்ணெயில் பற்றி திடீரென தீப்பிடித்தது. நொடிப்பொழுதில் கட்டிடத்தின் மேல் வரை தீ பரவியதால், அங்கு வசிக்கும் மக்கள் தப்பிக்க வழியில்லை. கரும் புகையால் பலர் திணறினர்.
Huge fire incident at Bajaj electronics beside Gomathi electronics due to fire crackers. pic.twitter.com/N8Uoe8LGyf
— Azmath Jaffery (@JafferyAzmath)தற்போது கட்டிடத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்கள் அனைவரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் என்று தெரிகிறது. உயிரிழந்தவர்களில் குழந்தை ஒன்றும் உள்ளதாகதெரிய வந்துள்ளது. தற்போது DRF, தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகத்தில் முடிந்த தீபாவளி கொண்டாட்டம்... ராணிப்பேட்டையில் பட்டாசு வெடித்த 4 வயது சிறுமி உயிரிழப்பு
ரசாயன கிடங்கு என்பதால், டிரம்களில் தேங்கிய எண்ணெய் கழிவுகள் சாலையில் ஓடியது. அங்கு மீட்பு பணியை மேற்கொள்வதும் கடினமாகி உள்ளது. சில ரசாயன டிரம்கள் இன்னும் கசியவில்லை. அவையும் தீப்பிடித்தால் தீ மேலும் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குடியிருப்பு பகுதியில் ரசாயன கிடங்கு இருப்பது ஏன்? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் ரசாயனக் கிடங்கு வைத்திருக்க அனுமதி கொடுத்தது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி ஒரு ரசாயன கிடங்கு இருந்தால், அதை அப்படியே அதிகாரிகள் விட்டுச் சென்றது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ரசாயன கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.