பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அயோத்தியில் ஏற்றப்பட்ட லட்சக்கணக்கான அகல் விளக்குகள் மூலம் நாடு முழுவதும் ஒளியேற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நடந்த தீபோத்சவ் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். "அற்புதமானது, தெய்வீகமானது மற்றும் மறக்க முடியாதது" என்று குறிப்பிட்டு, தீபோத்சவ் கொண்டாட்டத்தின் சில படங்களைப் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அயோத்தியில் ஏற்றப்பட்ட லட்சக்கணக்கான அகல் விளக்குகள் மூலம் நாடு முழுவதும் ஒளியேற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு பணம் கொடுத்து உதவிய ஆப்கன் கிரிக்கெட் வீரர் குர்பாஸ்!
अद्भुत, अलौकिक और अविस्मरणीय!
लाखों दीयों से जगमग अयोध्या नगरी के भव्य दीपोत्सव से सारा देश प्रकाशमान हो रहा है। इससे निकली ऊर्जा संपूर्ण भारतवर्ष में नई उमंग और नए उत्साह का संचार कर रही है। मेरी कामना है कि भगवान श्री राम समस्त देशवासियों का कल्याण करें और मेरे सभी… pic.twitter.com/3dehLH45Tp
"இதில் இருந்து வெளிப்படும் ஆற்றல் இந்தியா முழுவதும் புதிய வைராக்கியத்தையும் உற்சாகத்தையும் பரப்பி வருகிறது. பகவான் ஸ்ரீ ராமர் அனைத்து நாட்டு மக்களுக்கும் நல்லது செய்து, எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உத்வேகமாக இருக்க விரும்புகிறேன். ஜெய் ஶ்ரீ ராம்" என்று பிரதமர் மோடி இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
அயோத்தியில் சனிக்கிழமை பிரமாண்டமான தீபோத்ஸவ் கொண்டாட்டம் நடைபெற்றது. நகரம் முழுவதும் லட்சக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அயோத்தியில் உள்ள 51 தெருக்களில் ஒரே நேரத்தில் சுமார் 22.23 லட்சம் தீபங்கள் ஏற்றியதன் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
உத்தராகண்டில் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியின்போது விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 40 தொழிலாளர்கள்