தெலுங்கானாவில் காற்றில் சரிந்த பாலம்! இதைத்தான் 8 வருஷமா கட்டிகிட்டு இருந்தாங்களா!

By SG Balan  |  First Published Apr 23, 2024, 11:57 PM IST

"ஒப்பந்ததாரர் கமிஷனுக்காக அழுத்தம் கொடுக்கப்பட்டதால், ஓரிரு ஆண்டுகளில் பணியை நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அரசாங்கம் செலுத்தவில்லை. வெமுலவாடாவில் 2021இல் கனமழையில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை கட்டியதும் இதே ஒப்பந்ததாரர் தான்" என்றும் பக்கா ராவ் தெரிவிக்கிறார்.


தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி திங்கள்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இரவு 9.45 மணியளவில் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றில், பாலத்தின் இரண்டு காங்கிரீட் தூண்கள் இடிந்து விழுந்தன. எஞ்சி இருக்கும் மற்ற மூன்று தூண்டுகளும் இடிந்து விழக்கூடும் என்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

"அப்பகுதி வழியாக 65 பேருடன் சென்ற திருமண பேருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியிருக்கிறது. பேருந்து ஒரு நிமிடம் முன்புதான் அந்த இடத்தைக் கடந்து சென்றது" என்று அருகில் உள்ள ஒடேடு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் சிரிகொண்ட பக்கா ராவ் கூறுகிறார்.

Tap to resize

Latest Videos

ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் மனைர் ஆற்றின் குறுக்கே 2016ஆம் ஆண்டு அப்போதைய தெலுங்கானா சட்டமன்ற சபாநாயகர் எஸ்.மதுசூதனா சாரி மற்றும் உள்ளூர் எம்எல்ஏ புட்டா மது ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக கிட்டத்தட்ட ரூ.49 கோடி ஒதுக்கப்பட்டது.

5,785 கோடி சொத்து... நாட்டின் நம்பர் 1 பணக்கார வேட்பாளர்! இவர் யாருன்னு தெரியுமா?

இந்தப் பணி ஓராண்டில் முடிக்கப்பட்டு, மாந்தனி, பரக்கல் மற்றும் ஜம்மிகுண்டா ஆகிய மூன்று நகரங்களுக்கு இடையேயான தூரத்தை சுமார் 50 கி.மீ. ஆகக் குறைக்கும் வகையில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது.

"ஒப்பந்ததாரர் கமிஷனுக்காக அழுத்தம் கொடுக்கப்பட்டதால், ஓரிரு ஆண்டுகளில் பணியை நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அரசாங்கம் செலுத்தவில்லை. வெமுலவாடாவில் 2021இல் கனமழையில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை கட்டியதும் இதே ஒப்பந்ததாரர் தான்" என்றும் பக்கா ராவ் தெரிவிக்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக பாலத்தின் கீழ் மண் சாலை அமைத்து கிராம மக்கள் இதே பாதையை பயன்படுத்தி வந்தனர். "60 சதவீத பணிகள் கூட முடிக்கப்படாமல் கடந்த ஆண்டு மேலும் ரூ.11 கோடி நிதி இதற்காக ஒதுக்கப்பட்டது" என அப்பகுதியைச் சேர்ந்த சந்தீப் ராவ் சொல்கிறார்.

வெளியுறவுக் கொள்கையில் வாக்கு வங்கி அரசியல்: அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

click me!