மதத்தின் அடிப்படையில் பிரிப்பு.. வெட்கமில்லையா? காங்கிரஸ் கட்சியை வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி..!!

By Raghupati R  |  First Published Apr 23, 2024, 11:37 PM IST

ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.


இன்று ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, “இந்தக் கொளுத்தும் வெயிலில் திரளாக வந்து ஆசீர்வதித்த டோங்க்-சவாய் மாதோபூர் மக்களை மனதார வாழ்த்துகிறேன். பொது சேவைக்கு 24×7 என அர்ப்பணிப்புடன் இருப்பேன்  என்று உறுதியளிக்கிறேன். இன்று ராம பக்தரான ஹனுமான்ஜியின் பிறந்த தினமான புனித நாள். நாடு முழுவதற்கும் அனுமன் ஜெயந்தி நல்வாழ்த்துகள். சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவில் ஹனுமான் சாலீசாவைக் கேட்டதற்காக கடைக்காரர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் சாலீசாவை கேட்பது கூட குற்றமாகிவிடுகிறது. இதனை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

2014க்கு பிறகும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், ஜம்மு காஷ்மீரில் நமது படைகள் மீது இன்னமும் கற்கள் வீசப்பட்டிருக்கும், எதிரிகள் எல்லை தாண்டி வந்து நமது வீரர்களின் தலையைத் துண்டித்திருப்பார்கள், காங்கிரஸ் அரசு எதுவும் செய்திருக்காது. 2014க்கு பிறகும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், 'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்'  அமல்படுத்தப்பட்டிருக்காது, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்காது. 2014க்குப் பிறகும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், நாட்டில் தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்ந்திருக்கும். 2014 க்குப் பிறகும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், கொரோனா நேரத்தில் யாருக்கும் இலவச ரேஷன் அல்லது இலவசத் தடுப்பூசி கிடைத்திருக்காது. மேலும் நாட்டில் பணவீக்கத்தால் ஒரு கூச்சல் ஏற்பட்டிருக்கும்.

Tap to resize

Latest Videos

undefined

பாபா சாகேப்பின் அரசியல் சாசனத்தைப் பற்றிக் கூட கவலைப்படாத அளவுக்கு வாக்கு வங்கி அரசியலில் மூழ்கிக் கிடக்கிறது காங்கிரஸ். உண்மை என்னவெனில், காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை உடைத்து அவர்களின் சிறப்பு வாக்கு வங்கிக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினர். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு  முற்றிலும் எதிரானது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பாபா சாஹேப் வழங்கிய இடஒதுக்கீடு உரிமையை, காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணி மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க விரும்பியது” என்று கூறினார்.

காங்கிரஸை கடுமையாகத் தாக்கிப் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி, “ராம பக்தரான ஹனுமான் ஜியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. துணிச்சலான மகாவீரரான ஆஞ்சநேயரின்பிறந்தநாளில், துணிச்சலான மனிதர்களின் பூமியான சவாய்-மாதோபூருக்கு வருகின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. கூட்டம் தொடங்கிய பின்னரும், ஏராளமானோர் பந்தலுக்கு வந்துகொண்டே உள்ளனர்.  இந்தியாவுக்கான வலுவான அரசு அமையும் என்ற நம்பிக்கை நாட்டு மக்களிடையே நிலவுகின்றது. நாடு முழுவதும் மீண்டும் மோடி அரசு என்ற முழக்கங்கள்  எதிரொலிக்கின்றன. ராஜஸ்தான், நாட்டின் எல்லையில் நின்றுகொண்டு  காவலாளியைப் போல நாட்டை பாதுகாத்து வருகிறது.  

பாதுகாப்பான தேசம் மற்றும் நிலையான அரசு எவ்வளவு முக்கியம் என்பது ராஜஸ்தான் மக்களுக்கு நன்றாகவே தெரியும். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்து நாட்டில் சக்திவாய்ந்த அரசாங்கத்தை அமைக்க தனது ஆசீர்வாதங்களை ராஜஸ்தான் வழங்கியது. இந்த ஒற்றுமைதான் ராஜஸ்தானின் மிகப்பெரிய அம்சம்.  பாரத  மக்கள் தங்களுக்குள் பிளவுபட்டிருக்கும் போதெல்லாம், நாட்டின் எதிரிகள் அதைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். ராஜஸ்தான் மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் இன்னமும் நடந்து வருகின்றன. ஆகையால் ராஜஸ்தான் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில், ஒரு நிலையான மற்றும் நேர்மையான அரசாங்கம் நாட்டின் வளர்ச்சிக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை நாடு கண்டுள்ளது.  இன்று உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து வெளியே வந்துள்ளனர். வாக்காளர்கள் சரியான முறையில் வாக்களித்ததால், நாட்டில் இவ்வளவு பெரிய பணிகள் நடந்துள்ளன. பாஜக ஆட்சியில், ஏழைகளுக்கு இலவச ரேஷன் கிடைத்தது, நிரந்தர வீடு கிடைத்தது, அவர்களின் அடுப்பு எரிந்து கொண்டே இருந்தது. 2014-ல், டெல்லியில் பணியாற்றும் வாய்ப்பை மோடிக்கு நாட்டு மக்கள் அளித்தனர், இதன் காரணமாக நினைத்துப் பார்க்க முடியாதவற்றை நாடு செய்துகாட்டியது. 2014க்கு பிறகும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தின் மீது கல் வீச்சு நடந்திருக்கும்.

எல்லை தாண்டி எதிரிகள் வந்து நமது ராணுவ வீரர்களின் தலையைத்  துண்டித்திருப்பார்கள், காங்கிரஸ் அரசு எதுவும் செய்திருக்காது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், 'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டம்  அமல்படுத்தப்பட்டிருக்காது, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்காது, நாட்டில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்திருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், நாட்டின் பிரச்சனைகளில் கூட ஆதாயம் தேடியிருக்கும்.  காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏற்படுத்திய காயங்களை ராஜஸ்தான் மக்கள் மறக்கவே முடியாது. பெண்கள் மீதான வன்கொடுமைகளில் ராஜஸ்தானை காங்கிரஸ் முதல் இடத்திற்கு கொண்டு வந்தது. காங்கிரஸ் தலைவர்கள் சட்டசபையில் வெட்கமற்ற அறிக்கைகளை வெளியிட்டனர்.

இதுபோன்ற  ஆட்சேபனைக்குரிய மற்றும் வெட்கக்கேடான அறிக்கைகள் காங்கிரஸ் தலைவர்களுக்கு அழகல்ல. டோங்கில் உள்ள சமூக விரோதிகளால், இங்குள்ள தொழில்கள் மூடப்பட்டன. ஆனால் இப்போது மக்கள்,  திரு. பஜன் லால் அரசாங்கத்தை அமைத்துள்ளனர். மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு, மாஃபியாக்களும் குற்றவாளிகளும் ராஜஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் தப்பித்து ஓடும்  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விடைத்தாள் கசிவு மாஃபியாவும் முடங்கி விட்டது" என்று  மாண்புமிகு பிரதமர் திரு.  நரேந்திர மோடி கூறினார். மாநில பாஜக அரசின் சட்ட நடவடிக்கைகள் குறித்து குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு அவர்  கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், ஹனுமான் சாலீசாவை பக்தியுடன் கேட்டதற்காக கடைக்காரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்று மோடி கூறினார். "காங்கிரஸ் ஆட்சியில், ஹனுமான் சாலீசாவை கேட்பதும், மத நம்பிக்கையைப் பின்பற்றுவதும் கூட குற்றமாகும். இதில் ராஜஸ்தான் மாநிலமே பாதிக்கப்பட்டுள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டைக்கான அழைப்பை காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாக நிராகரித்த நிலையில், அவர்களின் ஆதரவாளர்கள் ஹனுமான் சாலீசாவைக் கேட்பவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.  பாஜக ஆட்சியில் ராஜஸ்தான் முழுவதும் ராமநவமி ஊர்வலங்கள் அமைதியாக நடந்தன, காங்கிரஸ் ஆட்சியிலோ ராமநவமி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஊர்வலத்தின் மீது கற்களை வீசி எறிந்தவர்களுக்கு அரசுப் பாதுகாப்பு வழங்கிய காங்கிரஸ், அவர்களைச் சமாதானப்படுத்த மல்புரா, கரௌலி, சாப்ரா, டோங்க், ஜோத்பூர் ஆகிய இடங்களை கலவரத்தின் தீயில் மூழ்கடித்தது. காங்கிரஸே மாநில மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

பாஜக அரசு வந்த பிறகு, ஹிந்துக்களின் நம்பிக்கையை கேள்வி கேட்க யாருக்கும் தைரியம் இல்லை. ராஜஸ்தானில் இதற்கு முன் நான் ஆற்றிய உரை,  காங்கிரஸ் முழுவதிலும் பீதியை உருவாக்கியுள்ளது.  பொதுமக்களின் சொத்துகளை அபகரித்து, தங்களது சலுகையைப் பெற்றவர்களுக்குப்  பங்கிட காங்கிரஸ் ஆழ்ந்த சதி செய்து வருகிறது. காங்கிரஸின் சூழச்சியை நான் அம்பலப்படுத்தியதால், இப்போது காங்கிரஸ் என்னைத் தூற்றுவதில் மும்முரமாக உள்ளது. எப்படியிருந்தாலும், காங்கிரஸ் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறது? காங்கிரஸ் தனது கொள்கைகளை மறைக்க முயல்கிறதா? காங்கிரசின் மறைமுகச் செயல்திட்டம் அம்பலமானவுடன்  நடுங்குகிறது. பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தைப் பற்றிக் கூட கவலைப்படாத அளவுக்கு வாக்கு வங்கி அரசியலில் மூழ்கிக் கிடக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் பொதுமக்களின் சொத்துக்களை கணக்கெடுப்பது பற்றி பேசியுள்ள நிலையில், அதன் தலைவர் ஒருவர் நாட்டை  எக்ஸ்ரே எடுப்பது பற்றி பேசுகிறார். பொதுமக்களிடம் உள்ள  தேவைக்கு மீறிய சொத்துக்களையும் பணத்தையும் பறிமுதல் செய்வதாக காங்கிரஸ் பேசி வருகிறது. ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸை விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் முடிவு செய்துவிட்டனர். காங்கிரஸ் அரசியல் சாசனத்துடன் விளையாட முயன்றது.   அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நேரத்தில், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அதற்கு நேர்மாறாகச் செய்தார். நாட்டின் வளங்களில் யாருக்கு முதல் உரிமை என்று அவர் வெளிப்படையாக கூறினார் அல்லவா? இது தற்செயலானது அல்ல, காங்கிரஸின் சிந்தனை எப்போதும் ஒரு பிரிவினரைத் திருப்திப்படுத்துவதாகவே இருந்து வருகிறது.

2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், ஆந்திரப் பிரதேசத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டைக் குறைத்து மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முதலில் முயற்சித்தது. இது ஒரு முன்னோடித் திட்டமாகும், இதை நாடு முழுவதும் செயல்படுத்த காங்கிரஸ் விரும்பியது. 2004 மற்றும் 2010 க்கு இடையில், காங்கிரஸ் இதை 4 முறை முயற்சித்தது. ஆனால் சட்டத் தடைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் விழிப்புணர்வு காரணமாக, காங்கிரஸ் தனது திட்டங்களில் வெற்றிபெற முடியவில்லை. 2011ம் ஆண்டிலும் இதே முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டது. கர்நாடகாவிலும் காங்கிரஸ்  இதேபோன்ற முயற்சியை மேற்கொண்டது.  மேலும் அரசியலமைப்பையே மாற்ற முயற்சித்தது. ஆனால் மோடி அரசியலமைப்பை நன்கு புரிந்துகொண்டவர். மோடி அரசியல் சாசனத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 

மோடி, பாபா சாகேப் அம்பேத்கரை வணங்கும் நபர். காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, வாக்கு வங்கி அரசியலுக்காக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை உடைத்து, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க விரும்பினர், அதேசமயம் அரசியல் சாசனம் அதற்கு முற்றிலும் எதிரானது என்பதே உண்மை. காங்கிரஸின் இந்த சதிகளுக்கு மத்தியில், மோடியின் உத்தரவாதம் இதுதான் - தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு முடிவுக்கு வராது, மதத்தின் பெயரால் அது பிரிக்கப்படவும் அனுமதிக்கப்பட மாட்டாது. நாட்டில் நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில்கூட  காங்கிரஸ் கட்சி சிக்கல் செய்தது.

ஆனால் தற்போது நாட்டின் மிகப்பெரிய டெல்லி-மும்பை விரைவுச்சாலை  சவாய் மாதோபூர் வழியாக செல்கிறது.  ஜெய்ப்பூர்-சவாய் மாதோபூர் ரயில் பாதையை இரட்டிப்பாக்கவும்  மத்திய அரசு  ஒப்புதல் அளித்துள்ளது. தசா-கங்காபூர் நகரை இணைக்கும் ரயில் பாதையில்  பல பதிற்றாண்டுகளாக  நிலுவையில் உள்ள பணிகளையும் மோடி அரசாங்கம் முடித்தது. மேலும் அப்பகுதியில் சிறந்த சுகாதார வசதிகளுக்காக மருத்துவக் கல்லூரியும் தயாராகி வருகிறது. கடந்த நாட்களில் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது‌.  ராஜஸ்தான் மக்கள் திரளாக வந்து எனக்கு ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர். இந்த வரம்தான் எனது மூலதனம், நாட்டு மக்களின் கனவுகள் என்னுடைய லட்சியம். கடந்த 10 வருடங்களில் செய்த பணிகள் வெறும் டிரைலர் மட்டுமே. நாட்டை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

வளர்ந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்ற, எனது ஒவ்வொரு நொடியையும் நாட்டுக்காக அர்ப்பணிக்கிறேன்.  அதனால்தான் 2047-க்காக தினமும் 24 மணி நேரமும் வாரத்துக்கு 7 நாட்களும்  உழைக்கிறேன்" என்றார் பிரதமர் திரு. மோடி.  ராஜஸ்தானின் அனைத்து வாக்காளர்களும் ஏப்ரல் 26ஆம் தேதி வாக்களித்து, பாஜகவின் அனைத்து வேட்பாளர்களையும் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

Bank Locker Rule: வங்கியில் லாக்கர் பயன்படுத்துகிறீர்களா.? இந்த ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. நோட் பண்ணுங்க!

click me!