தெலுங்கானா தேர்தல் 2023.. MLAக்களை காக்க ஐதராபாத்தில் தங்கிய துணை முதல்வர் சிவகுமார் - நிலவரம் என்ன?

By Ansgar R  |  First Published Dec 3, 2023, 10:05 AM IST

Telangana Election 2023 : இன்று நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் கட்சித் தலைவர்களை ஒன்றாக வைக்க, கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார், 10 மாநில அமைச்சர்களுடன் ஹைதராபாத்தில் உள்ளார்.


காங்கிரஸ் தலைவரும் கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் மற்றும் 10 அமைச்சர்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அக்கட்சியின் வேட்பாளர்களைப் பாதுகாக்க அங்கேயே உள்ளதாக செய்தி வட்டாரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அளித்த தகவலில் தெரிவித்துள்ளன. தெலுங்கானாவில் கட்சிக்கு தெளிவான வெற்றி கிடைக்கும் என எக்சிட் போல்கள் கணித்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு எம்எல்ஏ வேட்பாளருக்கும் ஒரு நபரை நியமித்து வைத்து அவர்களைப் பாதுகாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. தெலுங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், நாள் முழுவதும் வேட்பாளர்களுக்கு ஆள்-ஆள் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

undefined

தெலங்கானா தேர்தல் முடிவுகள்: முதல்வர் கேசிஆர் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவு!

ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலுக்கு வெளியே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் காணப்பட்டன, அவை காங்கிரஸ் அணிக்கானவை என்று செய்தி வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன. 'பிரச்சனைகளைத் தீர்ப்பவராக' அறியப்படும் சிவக்குமார், தனது எம்எல்ஏக்கள் மீதும், தெலுங்கானாவில் காங்கிரஸின் வெற்றியின் மீதும் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், பழைய கட்சியின் எம்எல்ஏக்களை வேட்டையாடுவது சாத்தியமில்லை என்றும் சனிக்கிழமை கூறியதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வாக்களித்த ஐந்து மாநிலங்களில் இருந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரையும், கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்டுகள் மற்றும் ஹோட்டல்களுக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அழைத்து வருமாறு அவரது கட்சி கேட்டுக்கொண்டது குறித்த செய்திகளை அவர் மறுக்க முயன்றார் என்று பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

"அவர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று சிவக்குமார் கூறியதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தெலுங்கானாவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுடன் சிலர் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாகவும், ஆனால் பழைய கட்சி அதை உள்ளூரிலேயே நிர்வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதி: கமல்நாத் நம்பிக்கை!

பல நிறுவனங்களில் தேர்தல் கணிப்பின்படி, தெலுங்கானாவில் காங்கிரஸ் 42 சதவீத வாக்குகள் மற்றும் 68 இடங்களுடன் வெற்றி பெறும். இதற்கிடையில், ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) 39 இடங்களையும், 36 சதவீத வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!