மாநில அரசை கவிழ்க்க சதி.. காங்கிரசிடம் பணம் பெற்றது அம்பலம்.. செடல்வாட்டை தோலுரித்த சிறப்பு புலனாய்வு குழு.

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2022, 2:20 PM IST
Highlights

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து பொய்யான ஆதாரங்களையும், பொய்யான சாட்சிகளையும் உருவாக்கி மாநில அரசை கவிழ்க்க சதி செய்தார் என்றும், இதன் பின்னணியில் மறைந்த காங்கிரஸ் தலைவர் அப்போதைய எம்பி அகமது பட்டேல் இருந்தாகவும், எனவே டீஸ்டா செடல்வாட்க்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் குஜராத் கலவரத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து பொய்யான ஆதாரங்களையும், பொய்யான சாட்சிகளையும் உருவாக்கி மாநில அரசை கவிழ்க்க சதி செய்தார் என்றும், இதன் பின்னணியில் மறைந்த காங்கிரஸ் தலைவர் அப்போதைய எம்பி அகமது பட்டேல் இருந்தாகவும், எனவே டீஸ்டா செடல்வாட்க்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் குஜராத் கலவரத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது டீஸ்டா செடல்வாட் வழக்கில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் மோடி பிரதமராக இருந்தபோது 2002 ஆம் ஆண்டு  நடந்த கலவரத்துக்கு எதிராக, மதவாத சக்திகளுக்கு எதிராக பல மனித உரிமை அமைப்புகளே தீவிரமாக போராடின. அப்படி போராடிய அமைப்புகளில் ஒன்றுதான் (citizen for justice and peace) மக்களுக்கான நீதி மற்றும் அமைதி என்ற அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் செயல்பாட்டாளர் ஆக தீவிரமாககளமாடியவர்தான்  " டீஸ்டா செடல்வாட் "  ஆவார். இவர் அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளர் ஆவார், மிக செல்வாக்கு மிக்க குடும்ப பின்னணியைக் கொண்டவர் ஆவார். 

இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியை தொடர்புபடுத்து அவருக்கு எதிராக டீஸ்டா வழக்கு நடத்தி வந்தார். இந்நிலையில் குஜராத் கலவரத்தை விசாரிக்கும் புலனாய்வு குழு கலவரத்திற்கும் மோடிக்கும் தொடர்பு இல்லை என பிரமான பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து  அந்த வழக்கில் பிரதமர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது, பிரதமர்  மோடிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையும் படியுங்கள்:Monsoon Session of Parliament: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்:24 மசோதாக்கள் அறிமுகம் செய்யும் மத்திய அரசு

இந்த உத்தரவு வந்த மறு தினம் அந்த வழக்கின் மனுதாரரான டீஸ்டா செடல்வாட்டை குஜராத் கலவரத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கடந்த ஜூன் 30ஆம் தேதி கைது செய்தது. அதாவது 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆதாரங்கள், பொய் சாட்சிகளை உருவாக்கி அவர் மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டார் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சிறையில் இருந்து வருகிறார், தற்போது தனக்கு எதிராக புனையப்பட்ட இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவருடன் சேர்த்து முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சீவ் பட் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஏற்கனவே சிறையில் இருந்து வருகின்றனர், இந்நிலையில்  டீஸ்டா செடல்வாட் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை எதிர்த்து எஸ்.ஐ.டி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் 2002 கலவரத்தைத் தொடர்ந்து அப்போது பொய் சாட்சிகளை உருவாக்கி, ஆதாரங்களை கட்டமைத்து அதன்மூலம் குஜராத்தில் இமேஜை கெடுக்கும் சதியில் செடல்வாட் ஈடுபட்டார், அப்போது மாநில அரசு கவிழ்க்கவும் அவர் சதி செய்தார்.

அப்போது குஜராத்தின் ராஜ்யசபா எம்பி.எம் காங்கிரஸ் தலைவருமான மறைந்த அகமது படேல் அதன் பின்னணியில் இருந்து செயல்பட்டார். இதற்காக டீஸ்டா செடல்வாட்டுக்கு 30 லட்ச ரூபாய் வரை கைமாறியது, முதற்கட்டமாக அவர் படேலிடம் 5 லட்சம் ரூபாய் பெற்றார், இது பொய் சாட்சிகளுக்காக பெறப்பட்ட பணம் ஆகும், அதற்கு  இரண்டு நாட்கள் கழித்து அகமதாபாத்தில் உள்ள ஷாஹிபாக்கில்  உள்ள சர்க்யூட் ஹவுசில் அகமது பட்டேலை அவர் சந்தித்தார். அப்போது அவரிடம் இருந்து 25 லட்ச ரூபாய் பெற்றார். ஆனால் இது நிவாரண பணிக்காக பெறப்பட்டதாக கூறப்பட்டது. இதில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கோத்ரா ரயில் விபத்து நடந்த ஒரு வாரத்திற்குள் செடல்வாட் பாதிக்கப்பட்டவர்களையும், பின்னர் சில அரசியல்வாதிகள் , அதிகாரிகளையும் சந்தித்தார். கலவரம் நடந்து நான்கு மாதத்திற்கு பிறகு அவர் சஞ்சீவ் பட் உடன் சென்று புதுதில்லியில் அகமது பட்டேலை அவரது இல்லத்தில் ரகசியமாக சந்தித்தார். இதை அடிப்படையாக வைத்து 2007ல் மத்திய அரசு  டீஸ்டா செடல்வாட்க்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தனக்குள்ள அரசியல் இலக்குகளை அடைவதற்காக அவர் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டார். அவர் ராஜ்யசபா உறுப்பினராக வேண்டும் என விரும்பினார்,

இதையும் படியுங்கள்: இனி கூகுள், மெடா மூலம் கிடைக்கும் செய்தி வருவாயில் அரசுக்கு பங்கு.. மத்திய அரசு திட்டம்.!

ஷபானா மற்றும் ஜாவித் அக்கரை எம்பிகள் ஆக்கியபோது தன்னை ஏன் ராஜ்யசபா உறுப்பினர் ஆகவில்லை என்று அவர் காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டுள்ளார்.  மேலும் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் தந்தை வித்தல் பாய் பாண்டியாவுடன் செடல்வாட் எப்படி தொடர்பில் இருந்தார் என்பதும் அந்த பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  நீதிக்காகவும் அமைதிக்காகவும் என்ற தனது தொண்டு நிறுவனத்தில் சேரும்படி அவர் பலரையும் வற்புறுத்தி வந்துள்ளார், அதாவது  2002 இல் மாநில அரசின் ஸ்திரத்தன்மையை கெடுக்கும் வகையில் உள்நோக்கத்துடன் அவர் செயல்பட்டுள்ளார்.

2006இல் பஞ்ச மஹாலில் பந்தர் வாடாவில் நடந்த கலவரத்தின்போது பேட்டி கொடுத்த அவர், மூன்று நாட்களுக்குள் குஜராத் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினார். மேலும் அவர் தொண்டு நிறுவனத்தின் நிதியை தவறாக பயன்படுத்தினார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ள குஜராத் கலவரத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, டீஸ்டா செடல்வாட்டின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் அவரை விடுதலை செய்தால் அவர் தடயங்களை சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் அந்த பிரமான பாத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!