Monsoon Session of Parliament: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்:24 மசோதாக்கள் அறிமுகம் செய்யும் மத்திய அரசு

By Pothy RajFirst Published Jul 16, 2022, 1:50 PM IST
Highlights

வரும் 18ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு 24 மசோதாக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

வரும் 18ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு 24 மசோதாக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

மத்திய அரசு 25 மசோதாக்களை கிடப்பில் வைத்துள்ளது. குறிப்பாக தனிநபர் டேட்டா பாதுகாப்பு மசோதா, சட்டவிரோத நடவடிக்கை திருத்த மசோதா, இடைத்தரகர் மசோதா, வனவிலங்கு பாதுகாப்புச்சட்டத் திருத்தம், மூத்தகுடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன் மசோதா, கிரிப்டோகரன்ஸி மசோதா ஆகியவை கிடப்பில் உள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு வேகம்காட்டும். 

வரும் 18ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடங்குகி ஆகஸ்ட் 12ம் தேதிவரை நடக்கிறது. இந்தமுறை மழைக்காலக் கூட்டத்தொடரை 18 அமர்வுகளாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  ஜூலை 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதிவரை 18 அமர்வுகள் நடத்தப்படஉள்ளன.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள மசோதாக்களில் கன்டோன்மென்ட் மசோதா முக்கியமானது. நாடுமுழுவதும் நகராட்சிகளை மேம்படுத்தி, எளிதாக வாழ்வதை உறுதி செய்ய இலக்கு வைத்துள்ளது. ஆதலால் இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு முன்னுரிமை வழங்கும்

 பலமாநில கூட்டுறவு சொசைட்டி திருத்த மசோதா என்பது, கூட்டுறவு சொசைட்டிகளில் மாநில அரசுகளின் தலையீட்டை நெறிப்படுத்து, கூட்டுறவு சொசைசிட்டியின் செயல்திறனை மேம்படுத்துவதாகும். இதன் மூலம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும், வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஏதுவான சூழல் உருவாகும். 

திவால் சட்டத் திருத்த மசோதா, தி காபி மேம்பாட்டு மசோதா, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மேம்பாட்டுக்கான நிறுவன மேம்பாடு மற்றும் சேவை மசோதா, பொருட்களுக்கான புவிசார் குறியீடு வழங்கும், பாதுகாப்பு மசோதாக்கள்அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இது தவிர, சேமிப்புக்கிடங்கு பாதுாப்பு மற்றும் மேம்பாட்டு மசோதா, போட்டி மசோதா, பழமைவாய்ந்த நினைவுச்சின்னங்கள், கட்டிடங்கள் பாதுகாப்பு திருத்த மசோதா, கலாசேத்ரா அறக்கட்டளை மசோதா, வனப்பாதுகாப்பு மசோதா, தேசிய பல்மருத்துவ ஆணைய மசோதா, தேசிய செவிலியர் மற்றும் பணியாளர்ஆணையர் மசோதா, மத்திய பல்கலைக்கழகங்கள் மசோதா ஆகியவை அறிமுகம்செய்யப்பட உள்ளன.

பத்திரிகை மற்றும் பதிவுகள் மசோதா, சுரங்கம் மற்றும் தாதுக்கள் மேம்பாடு, ஒழுங்குமுறை மசோதா, எரிசக்தி பாதுகாப்பு மசோதா, ஆட்கடத்தல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா, குடும்பநல நீதிமன்ற திருத்த மசோதா ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளன.

தமிழகம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்காக, பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் பட்டியலில் திருத்தம் செய்ய தனி மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

click me!