பாலியல் வன்கொடுமை? எதிர்த்து கேட்ட இளம் பெண்.. கொதிக்கும் எண்ணெயில் தள்ளப்பட்ட கொடூரம் - என்ன நடந்தது?

By Ansgar R  |  First Published Dec 31, 2023, 2:12 PM IST

Teen Girl Got Pushed into Oil Cauldron : ஆயில் மில்லில் பணிபுரியும் 18 வயது தலித் பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது அவர் சூடான எண்ணெய் உள்ள கொப்பரையில் தள்ளப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் நடந்த இந்த சம்பவத்தில் அந்த இளம்பெண் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் நடந்தாக கூறப்படும் அந்த மில் உரிமையாளர் உட்பட மூன்று பேர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து அந்த இளம் பெண்ணின் சகோதரர் தான் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

என்ன நடந்தது?

Latest Videos

undefined

நேற்று அந்தப் பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனுரா சில்வர்நகர் கிராமத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பணிபுரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மில் உரிமையாளர் பிரமோத் மற்றும் அவரது கூட்டாளிகள் ராஜு மற்றும் சந்தீப் ஆகிய மூவரும் தனது சகோதரிக்கு பாலியல் ரீதியாக தொல்லைகொடுத்துள்ளதாகவும் அதை தனது சகோதரி தட்டிக்கேட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். 

உறவுக்கார பெண்ணிடம் செய்யற வேலையா இது! குளிக்கும் போது வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த திமுக பிரமுகர்.!

அதே இளம் பெண் அவர்களை எதிர்த்து பேசியபோது, கோபமடைந்த அவர்கள், அந்த இளம் பெண்ணை சூடான எண்ணெய் நிரம்பிய கொப்பரைக்குள் தள்ளியுள்ளார் என்றும் அந்த சகோதரர் கூறினார். தில்லி மருத்துவமனையில் அந்த பெண்ணிடம் பதிவு செய்யப்பட்ட ஒரு அறிக்கையில், அந்த 18 வயது சிறுமி, குற்றம் சாட்டப்பட்டவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தன்னை கொப்பறைக்குள் தள்ளுவதற்கு முன்பு தவறான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறினார்.

நெருங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்.. பெங்களூரு Phoenix Mall of Asia மூடப்படுகிறது - ஏன்? அதிகாரிகள் விளக்கம்

அந்தப் பெண்ணின் உடலில் பாதிக்கு மேல் தீக்காயங்கள் ஏற்பட்டு, கால்கள் மற்றும் கைகள் கடுமையாக எரிந்துள்ளன என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் கூறுகின்றனர். அவரது சகோதரரின் புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி, பெண்ணைத் தாக்குதல் மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

"குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் நாங்கள் கைது செய்துள்ளோம், மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று வட்ட அதிகாரி விஜய் சவுத்ரி கூறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!