
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டின் விமர்சியாக வரவேற்க மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர், இந்நிலையில் நேற்று டிசம்பர் 30ஆம் தேதி பெங்களூரு காவல்துறை வெளியிட்ட அறிக்கையின் படி வடக்கு பெங்களூரில் உள்ள பீனிக்ஸ் மால் ஆஃப் ஏசியா இன்று டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்திருக்காது என்று அறிவித்துள்ளது.
தடை உத்தரவு 144(1) மற்றும் 144(2) ஆகிய விதிகளின் கீழ் அவருக்குள் Phoenix Mall of Asia டிசம்பர் 31 காலை 10 மணி முதல் ஜனவரி 15 2024 இரவு 11.59 வரை மக்கள் செல்ல தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் போது ஏற்படும் தேவையற்ற கூட்ட நெரிசலையும், தகராறுகளையும் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர காவல் துறை கமிஷனர் தயானந்தா நேற்று டிசம்பர் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உலகமே அயோத்தி ராமர் கோயில் திறப்புக்காகக் காத்திருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி பெங்களூருவின் ஹெபால் பகுதியில் உள்ள பீனிக்ஸ் மால் ஆப் ஏசியா மற்றும் ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள பீன்ஸ் மார்க்கெட் சிட்டி ஆகிய இடங்கள் சில கனடா அமைப்பினரால் வலுக்கட்டாயமாக மூட உத்தரவிடப்பட்டது. கன்னட மொழியில் தான் பெயர் பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்ற கோஷங்களை அவர்கள் எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பெங்களூரு ஏர்போர்ட்டை இணைக்கின்ற பெள்ளரி சாலையில் மற்றும் வடக்கு பெங்களூரில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் பீனிக்ஸ் மால் அப் ஏசியா இருக்கின்ற ஏலக்கண்ணா என்ற இடத்திலும் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தேவையற்ற கூட்டநெரிசலை தவிர்க்கவும் தேவையற்ற விபத்துகளை தடுக்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெங்களூரு நகர கமிஷனர் வெளியிட்ட தகவலின் படி டிசம்பர் 31ஆம் தேதி புது வருட கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட உள்ளது. மேலும் ஜனவரி 13 இரண்டாம் சனிக்கிழமை மற்றும் ஜனவரி 14 ஞாயிற்றுக்கிழமை மற்றும் மகா சங்கரத்தி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மால்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறினார். மேலும் அவர் வெளியிட்ட தகவலின் படி விழா காலங்களில் பீனிக்ஸ் மால் ஆப் ஏசியா கட்டிடத்தில் சுமார் 10,000 கார்கள் மற்றும் 10,000 இருசக்கர வாகனங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது அப்பகுதியை கடக்கும் பொது மக்களுக்கும், அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் மிகப்பெரிய சிரமங்களை ஏற்படுத்தும்.
பெங்களூருவில் உள்ள அந்த பிரபலமான மால் சுமார் 12 மாடி கட்டிடம் ஆகும், இதில் இரண்டு பேஸ்மெண்டுகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 86 ஆயிரத்து 421 ஸ்கொயர் மீட்டர் அளவு அளவு கொண்ட அந்த மாலில் பேஸ்மெண்டில் 2,324 கார்கள் மற்றும் டூவீலர்கள் நிறுத்த மட்டுமே இடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் விழா காலங்களில் வாகனங்கள் உள்ளே நுழைய முடியாமல் வரிசை வரிசையாக சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருப்பது மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.