பிரபல டாடா நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் தனது புதிய பிராண்ட் அடையாளத்தை பெற்றுள்ளது. இன்று வியாழன் அன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது. சிவப்பு மற்றும் ஊதா நிறங்கள் புதிய லோகோவின் ஒரு பகுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனின் கூறுகையில், ''புதிய லோகோ தைரியமான பார்வை, வரம்பற்ற சாத்தியங்கள், முன்னேற்றம் மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இன்று நீங்கள் இங்கு காணும் புதிய லோகோ வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்பட்ட அந்த தங்க ஜன்னலை பிரதிபலிக்கும். (தங்க ஜன்னலின் முகப்பு வரம்பற்ற சாத்தியங்கள், முன்னேற்றம், நம்பிக்கை ஆகியவற்றை குறிக்கிறது'' என்றார்.
கடந்த 2022 டிசம்பரில் ஃபியூச்சர் பிராண்டுடன் டாடாவின் கூட்டு வைத்துக் கொண்டது. அதுமுதல் ஏர் இந்தியா பெயரை மாற்றும் நடவடிக்கைகள் துவங்கின. வடிவமைப்பு மற்றும் பிராண்ட் ஆலோசனைகளை ஃபியூச்சர் பிராண்ட்ஸ் வழங்கியுள்ளது. ஜனவரி 2022-ல் டாடா சன்ஸ் நிறுவனத்தால் முழுமையாக ஏர் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியாவின் முதல் ஏர்பஸ் ஏ350 விமானம் புதிய லைவரியுடன் வரும் டிசம்பர் 2023ல் அறிமுகமாகும்போது, தங்கள் பயணிகள் இந்த புதிய லோகோவைக் காணலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய பிராண்டாக மாறும் இந்த சூழலில் ஏர் இந்தியா நிறுவனம் உலக தரத்தில், உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு ஒரு சுகமான அனுபவத்தை கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டது.
மகளுக்குப் பணம் எங்கிருந்து வந்தது? பினராயி விஜயன் ஊழல் வழக்கில் சிக்கப் போகிறார் என பாஜக எச்சரிக்கை
இந்த புதிய லோகோ நமது புதிய இந்தியாவை உலகெங்கிலும் பறைசாற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் செழுமையான பாரம்பரியம் மற்றும் வரலாறு உள்ளிட்டையையும், இந்தியாவின் விருந்தோம்பலையும் இது குறிக்கும் வண்ணம் உள்ளது என்றும், அந்த அளவிற்கு தங்களுடைய சேவைகளும் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவினுடைய இந்த ஏர் இந்தியா விமான சேவையை முழுமையாக உருமாற்றும் பணியின் பாதி கட்டத்தில் தாங்கள் இருப்பதாக ஏர் இந்தியா நிறுவன சிஇஓ கேம்பில் வில்சன் கூறினார்.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில், ஃபியூச்சர் பிராண்டுகளுடன் டாடா நிறுவனம் ஏற்படுத்திய கூட்டுறவைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவின் மறுபெயரிடுதளுக்கான முயற்சிகள் முன்னேறின. வடிவமைப்பு மற்றும் பிராண்ட் ஆலோசனை என்பது ஃபியூச்சர் பிராண்ட்ஸ் நிறுவனம், ஏர் இந்தியாவிற்கு வழங்கும் வழங்கும் இரண்டு சேவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 2022ல் டாடா சன்ஸ் நிறுவனத்தால் முழுமையாக கையகப்படுத்தப்பட்ட பிறகு, ஏர் இந்தியா இந்த மறுபெயரிடலுக்கு உட்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிராண்டை விளம்பரப்படுத்தும் பணி McCann Workgroup India நிறுவனத்திற்கு சென்றதும் நினைவுகூரத்தக்கது.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.. மக்களவையில் படுதோல்வி அடைந்த நம்பிக்கையில்லா தீர்மானம்!