மத்தியில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக, மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானமானம் தோல்வியில் முடிந்தது.
மக்களவையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக எதிர்கேகட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பொழுது, அதில் கலந்து கொள்ளாமல் எதிர்கட்சிகள் மக்களவையில் இருந்து வெளியேறினர்.
மக்களவையில் இன்று மாலை 5 மணிக்கு அவை கூடிய பொழுது பிரதமர் மோடி தனது பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து விவாதிக்க தொடங்கினார்.
அண்ணாமலை நடை பயணத்திற்கு ஆதரவு.... ஆனால் பாஜகவிற்கு ஆதரவு இல்லை- விஜய பிரபாகர்
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து இருந்தன. நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேசி இருந்தார். இவரைத் தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மோடி அரசு குறித்து பேசினார். நேற்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருந்தார். அப்போது, பிரதமர் தன்னிடம் மணிப்பூர் விஷயம் குறித்து கேட்டு அறிந்து கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியிந லோக்சபா தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசி இருந்தார். அப்போது அவர் நேரடியாக பிரதமர் மீது தாக்குதல்கள் தொடுத்து இருந்ததால், ஆளும் பாஜகவினர் எழுந்து நின்று பிரதமருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். தொடர்ந்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, ''மக்கள் அரசன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருவதாகக் கூறினார்.
இதன் மூலம் இந்திய மக்கள் அனைவருக்கும் தான் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். ஊழல் அற்ற ஆட்சியையும் லட்சியங்களையும் உரிய வாய்ப்புகளையும் நம் நாட்டு இளைஞர்களுக்கு வழங்கிட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பிரதமர் மோடி அவர்கள் கூறினார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் ஆகிய நீங்களோ ஏழைகளின் பசியை தீர்க்க திட்டங்களை திட்டாமல், உங்கள் அதிகார பசியை மட்டுமே தீர்த்துக் கொள்ள திட்டங்களை தீர்த்து வருகிறீர்கள் என்று கடுமையாக சாடினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கச்சத்தீவு மீட்பது குறித்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், இது இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் நடந்தது என்றும், ஆனால் ஸ்டாலின் எனக்கு கடிதம் எழுதி அதை மீட்டுத் தருமாறு கேட்கிறார் என்றும் கடுமையாக சாடி இருந்தார்.
மணிப்பூரில் நடந்த வன்முறைக்காக என்.டி.ஏ அரசுக்கு எதிராக காங்கிரஸால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் 3வது மற்றும் கடைசி நாள் விவாதம் இன்று நடைபெற்றது.
மணிப்பூர் மக்களுக்கு நான் ஒன்றைமட்டுமே உறுதியளிக்க விரும்புகிறேன், நாடு உங்களுடன், இந்த பாராளுமன்றம் உங்களுடன் நிற்கிறது, மணிப்பூர் இந்த கடுமையான நிலையில் இருந்து மீண்டு, விரைவில் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையை நோக்கிய தனது பயணத்தை துவங்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
மீண்டும் மீண்டும் எமது அரசாங்கம் மீது நாட்டு மக்கள் தங்களது நம்பிக்கையை காட்டி வருகின்றனர், அவர்களுக்கு எங்கள் நன்றிகளை காட்டவே நான் இங்கு நிற்கிறேன் என்றார். எதிர்கட்சியினர் யாருக்கெல்லாம் கேட்டது நடக்கவேண்டும் என்று விரும்புகிரார்களோ, அவர்களுக்கு நல்லகாலம் பிறக்கிறது, அதற்கு நான் ஒரு மிகசிறந்த உதாரணம் என்றார் அவர்.
இலங்கை அனுமனால் எரிக்கப்படவில்லை, அது (ராவணனின்) ஆணவத்தால் எரிந்தது என்பது தான் உண்மை. மக்களும் ராமரைப் போன்றவர்கள், அதனால்தான் உங்களை 400ல் இருந்து 40 ஆகக் குறைத்துள்ளார்கள். மக்களால் இரண்டு முறை முழுப்பெரும்பான்மையுடன் எங்கள் ஆட்சியைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் ஒரு ஏழை இங்கே அமர்ந்திருப்பது உங்களை கவலையடையச் செய்கிறது, இது உங்களை தூங்க விடவில்லை, பொறுத்திருங்கள் அடுத்த 2024ல் கூட நாட்டு மக்கள் உங்களை தூங்க விடமாட்டார்கள். ஒரு காலத்தில் விமானங்களில், பிறந்தநாள் கொண்டாட கேக் வெட்டும் காலம் இருந்தது. ஆனால் இன்று அதே விமானங்களில் ஏழைகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.