கச்சத்தீவு என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது என்று கேட்டால், தமிழக முதல்வர் ஸ்டாலின் எனக்கு கடிதம் எழுதுகிறார். அதில் "கச்சத்தீவை திரும்பக் கொண்டு வாருங்கள் மோடி" என்று எழுதுகிறார். இது ஒரு தீவு, ஆனால் அதை வேறு நாட்டுக்கு யார் கொடுத்தது. இந்தியாவின் ஒரு பகுதி அல்லவா கச்சத்தீவு. இது இந்திரா காந்தியின் தலைமையில் நடந்தது என்று காட்டமாக கூறியுள்ளார் பிரதமர் மோடி.
கட்சி தீவை மீட்பது குறித்தும், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பது குறித்தும் சில தினங்களுக்கு முன்பு கடிதம் ஒன்றை பிரதமர் மோடி அவர்களுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எழுதியது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்திருந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் பல நிகழ்வுகள் குறித்து பேசப்பட்டது, குறிப்பாக தமிழகம் மற்றும் இலங்கை இடையேயான படகு போக்குவரத்து குறித்தான பல விஷயங்கள் பேசப்பட்டது.
அதேபோல கடந்த மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில், ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் பயணமாக டெல்லி வரும் பொழுது, அவருடனான பேச்சுவார்த்தையில் கச்சத்தீவை மீட்பது குறித்தும், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பது குறித்தும் பேச வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இன்று மக்களவையில் பாஜக கட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான நிகழ்வின் போது பேசிய பிரதமர் மோடி அவர்கள் கச்சத்தீவை தாரை பார்த்தது இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கச்சத்தீவை மீட்டு தருமாறு எனக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று கூறி காட்டமாக பேசினார்.
எதிர்க்கட்சிகள் நோ-பால் போட்டால் நாங்கள் சதம் அடிப்போம்! பதிலடி கொடுக்கும் பிரதமர் மோடி!