Agnipath Scheme Protest : அக்னிபத் திட்டம் : முப்படைகளில் தற்காலிக பணி வீரர்கள்! 4ஆண்டுக்கு பின் என்ன செய்ய!

By Dinesh TGFirst Published Jun 16, 2022, 12:22 PM IST
Highlights

4 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணிபுரியும் வகையில் அக்னிபத் என்ற திட்டதை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளைஞர்கள், 4 ஆண்டுகளுக்கு பின்னர் என்ன செய்வது என கோரி நாடு முழவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து நாடுகளும் தங்களின் ராணுவ பலத்தை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ராணுவத்திற்கென நிது ஒதுக்குவதில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில், ராணுவத்தின் தேவையில்லா செலவைக் குறைக்கும் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

அக்னிபத் திட்டம்

அக்னிபத் திட்டத்தின் படி ராணுவத்தில் 17.5 வயது முதல் 21 வயதுள்ள இளைஞர்கள் 45,000 பேர் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளனர். இதன் மூலம் இளைஞர்களுக்கு ராணுவத்தில் பணிபுரிய வாய்பு கிடைப்பதோடு, ஆயுதப்படை இளம் வீரர்கள் படையாக இருப்பார்கள் என மத்திய அமைச்சகம் தெரிவிக்கிறது.

இதற்கான ஆட்கள் தேர்வுக்கான நடைமுறைகள் இன்றுமுதல் ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்களாக அழைக்கப்பட உள்ளனர். ஆயுதப்படை வீரர்கள் தேர்வுக்கு நடைபெற்று அதே நடைமுறைகள் இதற்கும் கடைபிடிக்கப்படும் என்றும், இவர்களின் மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை படிகளும்வழங்கப்படும். மருத்துவ மற்றும் காப்பீடு வசதிகளும் வழங்கப்படும்.

நான்கு ஆண்டுக்கு பின்னர், 25% வீரர்கள் பணி நீட்டக்கப்பட்டு ஆயுதப்படையில் 15 ஆண்டு காலம் பணியாற்ற அனுமதிக்கப்படுவர். பணியில் நீட்டிக்கப்படாதவர்கள் 4 ஆண்டுகளுக்கு பின் 11 முதல் 12 லட்சம் வரை நிதி வழங்கப்படும். ஆனால், ஓய்வூதிய பலன்கள் பெற முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

போராட்டம் வெடிப்பு

இந்நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிக பணிக்காக யாரும் ராணுவத்தில் சேர ஆசைப்படுவதில்லை என்றும், 4 ஆண்களுக்குப் பின்னர், மீண்டும் வேலை தேடி அலையவேண்டுமா என கேள்வி எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநிலம் முங்கர், ஜெஹானாபாத் ஆகிய பகுதிகளில் சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடிகளை உடைத்தும், வாகனங்களுக்கு தீவைத்தும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்து.

click me!