ரேஷன் கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகளாக மாறும்... ஆளுநரின் சூப்பர் அறிவிப்பு

By Narendran SFirst Published Jan 26, 2022, 6:03 PM IST
Highlights

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளை சூப்பர் மார்க்கெட்டுகளாக தரம் உயர்த்த தேசிய கூட்டுறவு அபிவிருத்திக் கழகத்திடம் நிதி உதவி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெலங்கானா நிரந்தர ஆளுநரும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பொறுப்பு ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளை சூப்பர் மார்க்கெட்டுகளாக தரம் உயர்த்த தேசிய கூட்டுறவு அபிவிருத்திக் கழகத்திடம் நிதி உதவி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெலங்கானா நிரந்தர ஆளுநரும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பொறுப்பு ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பாஜக தலைவராக தமிழிசை, தற்போது தெலங்கானா மாநிலத்தின் நிரந்தர ஆளுநராகவும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பொறுப்பு ஆளுநராகவும் உள்ளார். இன்று குடியரசு தின விழாவையொட்டி தெலங்கானா சென்ற தமிழிசை, அங்கு நடைபெற்ற தேசியக் கொடியேற்றி விழாவில் பங்கேற்று தேசிய கொடியினை ஏற்றினார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி சென்ற அவர், அங்கு தேசிய கொடியேற்றினார். இந்திய வரலாற்றில் ஆளுநர் ஒருவர் இரு மாநிலங்களில் கொடியேற்றுவது இதுவே முதன்முறை. கொடியேற்றிய பின் உரையாற்றிய அவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, 2050ல் உலகின் பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ந்து வரும் நாடாக மட்டுமல்லாமல் மரபுகளையும் மாண்புகளையும் போற்றுகின்ற நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியா இன்று கலாசாரத்தில் மட்டுமல்லாமல் அறிவியல் ஆராய்ச்சி துறையிலும் முன்னோடி நாடாக உலக அரங்கில் பீடுநடை போட்டு வருகிறது. பிரதமரின் வழிகாட்டுதலின் நெருக்கடியான கொரோனா பெருந்தொற்று சூழலில் இருந்து இந்தியா மீண்டெழுந்திருக்கிறது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளை சூப்பர் மார்க்கெட்டுகளாக தரம் உயர்த்த தேசிய கூட்டுறவு அபிவிருத்திக் கழகத்திடம் நிதி உதவி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுவை கூட்டுறவு கட்டிட மையத்தின் மூலமாக பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு மணல் விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதற்காக மணமேடு தென்பெண்ணை ஆற்றில் குவாரியை பயன்படுத்த வருவாய்த்துறைக்கு உரிமைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற மின்வசதி திட்டத்தின் மூலம் மின் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20.05 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து மின் நுகர்வோருக்கும் தடையற்ற, தரமான மின் விநியோகம் உறுதி செய்யப்படும். புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஆன்மீக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, கல்வி சுற்றுலா மற்றும் இயற்கை சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 

click me!