கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சக்கடைகளை சுத்தம் செய்யும் போது இறந்து போகும் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 3வது இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கழிவு நீர் அகற்ற, மலக்குழியில் சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நாடாளுமன்றம் சட்டம் இயற்றியிருக்கிறது. ஆனால், அதையெல்லாம் மதிக்காமல் நாடு முழுக்க பரவலாக மனித மலத்தை மனிதர்களே அள்ளும் கொடுமை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
மலக்குழிகளிலும், கழிவு நீர் தொட்டிகளிலும் வேலை செய்யும் பணியாளர்கள் மரணமடைவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இதையும் படிங்க..அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி.. எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு - பங்கேற்பாரா ? வெளியே கசிந்த தகவல் !
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்தவாலே, ‘பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகள் ஆகியவற்றில் உள்ள கழிவுகளை அகற்றும் போது கையால் அகற்றக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட நாட்டின் 20 மாநிலங்களில் இந்த ஆண்டில், பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் உள்ள கழிவுகளை அகற்றும் போது 48 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் 13 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 பேரும், 3வதாக தமிழகத்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் 3வது இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !