பல்கலை., வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா… கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!!

By Narendran SFirst Published Dec 13, 2022, 4:53 PM IST
Highlights

கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரள அரசுக்கும், அம்மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதை அடுத்து பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்பேரில் கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியை ஆளுநரிடம் இருந்து பறிக்கும் வகையில் நவம்பர் மாதத் தொடக்கத்தில் அவசரச் சட்டம் ஒன்று கேரள அரசால் கொண்டு வரப்பட்டது.

இதையும் படிங்க: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் தெரியுமா ? முழு விபரம் இதோ

இதை அடுத்து மாநில முதல் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கானை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கான வரைவு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த கடந்த புதன்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை முதல்வர் பினராயி விஜயன் சார்பில் அமைச்சர் பி.ராஜீவ் தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: தடம் பதிக்கும் மோடி அரசு !கம்போடியாவில் அங்கோர் வாட் கோயிலை புதுப்பிக்கும் இந்திய அரசு

இந்த நிலையில் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதாவை கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதியை வேந்தராக நியமிக்கும் முன்மொழிவை நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அவையை புறக்கணித்தன. இருந்த போதிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

click me!