India China Conflict: சீனாவுடன் மோதல்!இந்தியத் தரப்பில் உயிரிழப்பு ஏதும் இல்லை:ராஜ்நாத் சிங் விளக்கம்

By Pothy RajFirst Published Dec 13, 2022, 2:06 PM IST
Highlights

அருணாச்சலப்பிரதேச எல்லையில், சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் தரப்பில் உயிரிழப்பு ஏதும் இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்தார்

அருணாச்சலப்பிரதேச எல்லையில், சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் தரப்பில் உயிரிழப்பு ஏதும் இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்தார்

அருணாச்சலப்பிரதேசத்தின் தவான் செக்டர் பகுதியில் கடந்த 9ம் தேதி இந்தியா, சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன வீரர்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதலில்இரு நாட்டு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

சீனாவிடமிருந்து ரூ.1.35 கோடி நன்கொடை பெற்ற ராஜீவ்காந்தி அறக்கட்டளை: காங்கிரஸை கடுப்பேற்றிய அமித் ஷா

இந்த விவகாரம் வெளியானதையடுத்து, காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியதும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் இந்தியா சீனா வீரர்கள் மோதல் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சீ பகுதியில் கடந்த 9ம் தேதி சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்று, அங்கு ஏற்கெனவே இருக்கும் சூழலை தன்னிச்சையாக மாற்ற முயன்றது. சீன வீரர்களின் இந்த தன்னிச்சையான செயலை இந்திய வீர்கள் துணிச்சலுடன், தீர்மானமாக எதிர்த்தனர். 

மோடி அரசு இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தைக் கூட யாரும் பிடிக்க முடியாது: அமித் ஷா ஆவேசம்

இதனால் இருதரப்பு படைகளுக்கும் இடையே வார்த்தை மோதலும், அதைத் தொடர்ந்து கைகலப்பும் ஏற்பட்டது. இதில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபடாமல், இந்திய படைகள் துணிச்சலுடன் எதிர்த்தனர். இதையடுத்து, இரு நாட்டு கமாண்டர்களும் தலையிட்டதையடுத்து, சீன ராணுவத்தினரும், இந்திய படையினரும் திரும்பிச் சென்றனர்

இந்த மோதலில் இரு தரப்பு படையினருக்கும் இடையே சிறு காயங்கள் ஏற்பட்டன. நம்முடைய இந்திய ராணுவத்துக்கு எந்தவிதமான உயிரிழப்பும் இல்லை என்று இந்த அவையில் தெரிவிக்கிறேன். 

இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது, அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் எல்லையில் ஏற்படுத்த வேண்டும் என்று சீனாவிடம் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ராஜாங்கரீதியாகவும், சீன அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தியா-சீனா ராணுவீரர்கள் மோதல்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

இந்தியாவின் எல்லைப் பகுதியை தொடர்ந்து இந்தியப் படைகள் பாதுகாப்பார்கள்,எந்தவிதமான அத்துமீறலையும் தொடர்ந்து எதிர்ப்பார்கள் என்று உறுதியளிக்கிறேன். இந்திய வீரர்களின் துணிச்சலான செயல்பாடுகளுக்கு அவையில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் ஆதரவார்கள் என்று நம்புகிறேன். 

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்

click me!