Amit Shah:சீனாவிடமிருந்து ரூ.1.35 கோடி நன்கொடை பெற்ற ராஜீவ்காந்தி அறக்கட்டளை: காங்கிரஸை கடுப்பேற்றிய அமித் ஷா

By Pothy Raj  |  First Published Dec 13, 2022, 1:41 PM IST

சீனத் தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி நன்கொடையாக ராஜீவ் காந்தி அறக்கட்டளை நன்கொடையாகப் பெற்றது. இந்த நன்கொடை அந்நிய பங்களிப்பு நிதிச்சட்டத்தின் விதிமுறையின் கீழ்வரவில்லை என்பதால், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது என்று அமித் ஷா தெரிவித்தார்.


சீனத் தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி நன்கொடையாக ராஜீவ் காந்தி அறக்கட்டளை நன்கொடையாகப் பெற்றது. இந்த நன்கொடை அந்நிய பங்களிப்பு நிதிச்சட்டத்தின் விதிமுறையின் கீழ்வரவில்லை என்பதால், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது என்று அமித் ஷா தெரிவித்தார்.

அருணாச்சலப்பிரதேசத்தின் தவான் செக்டர் பகுதியில் கடந்த 9ம் தேதி இந்தியா, சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன வீரர்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதலில்இரு நாட்டு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

Tap to resize

Latest Videos

இந்தியா-சீனா ராணுவீரர்கள் மோதல்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

இந்த விவகாரம் வெளியானதையடுத்து, காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது: 

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிப்பார் எனத் தெரிவித்தபோதிலும் கேள்வி நேரத்தை நடத்தவிடாமல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையூறு செய்தனர்.

பிரதமர் மோடியைக் கொல்லத் தயாராகுங்கள்! சர்ச்சையாகப் பேசிய காங்கிரஸ் தலைவர் கைது

அப்போது கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விப்பட்டியலைப் பார்த்தேன், அதில் 5வது கேள்வியைப் பார்த்தபின்புதான் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவு பதற்றம் அடைகிறது எனத் தெரிந்தது.ராஜீவ் காந்தி அறக்கட்டளை அந்நிய பங்களிப்பு ஒழுங்கு முறைச்சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதற்காக அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இந்தக் கேள்வியைத் தவிர்க்கவே காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

சீனத் தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி நன்கொடையாக ராஜீவ்காந்தி அறக்கட்டளை பெற்றுள்ளது. இது எப்சிஆர்ஏ விதிகளுக்கு உட்பட்டு இல்லை என்பதால் ரத்து செய்யப்பட்டது.இந்த அறக்கட்டளையின் தலைவராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இருந்தார். 

ராஜீவ் காந்தி அறக்கட்டளை 2005-06 மற்றும் 2006-07ம் ஆண்டில் சீனத் தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி நன்கொடையாக பெற்றது அந்நியப் பங்களிப்புச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது என்பதால் அறக்கட்டளை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் எம்பிக்கள் அனுமதித்தால், நாடாளுமன்றத்தில் இதற்கு விளக்கமும், பதிலும் அளிப்பேன்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தரமான இடம் வழங்கப்பட்டது. ஆனால், சீனா மீது நேரு கொண்டிருந்த அன்பால், அந்த இடம் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டது

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்
 

click me!