அருணாச்சலப்பிரதேச எல்லையான தவாங் செக்டார் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அருணாச்சலப்பிரதேச எல்லையான தவாங் செக்டார் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அருணாச்சலப்பிரதேசத்தின் தவான் செக்டர் பகுதியில் கடந்த 9ம் தேதி இந்தியா, சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன வீரர்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதலில்இரு நாட்டு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.
பிரதமர் மோடியைக் கொல்லத் தயாராகுங்கள்! சர்ச்சையாகப் பேசிய காங்கிரஸ் தலைவர் கைது
இந்த விவகாரம் வெளியானதையடுத்து, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரியிருந்தனர். மக்களவை இன்று தொடங்கியதும், 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவை தொடங்கியதும், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், டிஆர் பாலு, அசாசுதீன் ஒவாய்சி, ஆகியோர் இந்தியா, சீனா ராணுவவீரர்கள் மோதல் விவகாரத்தை எழுப்பினர்
அப்போது எழுந்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ இந்த விவகாரத்தில் 12 மணிக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிப்பார்”எனத் தெரிவிக்கப்பட்டது.
21 ஆண்டுகள் நிறைவு!நாடாளுமன்ற தீவிரவாதத் தாக்குதல் பற்றிய 10 முக்கிய தகவல்கள்
ஆனால், எதிர்க்கட்சியினர் அது குறித்து கருத்தில்கொள்ளாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர், உடனடியாக இந்த விவகாரத்தை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என்று கோரினர். ராஜ்நாத் சிங் விளக்கத்துக்குப்பின் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும், பிரதமர் மோடியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சிகள் விவாதிக்க விரும்பினால், நோட்டீஸ் அளிக்க வேண்டும். நோட்டீஸ்அளித்தபின் அது ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு அதன்பின் விவாதம் நடக்கும். ஏன் அவையை ஒத்திவைக்க கோருகிறீர்கள், அவை அமைதியாக நடக்கிறது என்றார்.
ஆனால், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதையடுத்து, அவையை 12 மணிவரை மக்களவைத் தலைவர் ஒத்திவைத்தார்.