இந்திய ஜனநாயகத்தின் கோயிலாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, இன்றுடன் 21ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர், பாதுகாப்புப்படை வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இந்திய ஜனநாயகத்தின் கோயிலாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, இன்றுடன் 21ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர், பாதுகாப்புப்படை வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர்.
2001, டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது இந்தத் தாக்குதலை லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் அரங்கேற்றினார்கள்.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் 11ஆயிரம் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலி: மத்திய அரசு தகவல்
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி கேட்டு, இந்த தேசமே குலுங்கியது. இந்தத் தாக்குதலுக்குப்பின் இந்தியா, பாகிஸ்தான் உறவு முன்பு இருந்ததைவிட மேலும் மோசமானது.
இந்தத் தாக்குதலில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு இன்று மத்திய அரசு சார்பில் நினைவஞ்சலி செலுத்தி, மரியாதை செலுத்தப்படுகிறது.
மோடி ஆட்சியில் ரூ.1.25 லட்சம் கோடி கறுப்பு பணம் மீட்பு: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
தாக்குதல் நடந்தது எப்படி என்பது குறித்த சுருக்கமான பார்வை
1. பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தின் மீது 2001, டிசம்பர் 13ம் தேதி தாக்குதல் நடத்தினர்
2. நாடாளுமன்ற வளாகத்துக்குள், உள்துறை அமைச்சகத்தின் போலியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வெள்ளைநிற அம்பாசிடர் காரில் 5 தீவிரவாதிகளும் நுழைந்தனர்
3. தீவிரவாதிகளிடம் ஏகே47 துப்பாக்கிகள், பிஸ்டர், கையெறி குண்டுகள், சிறிய வகை லாஞ்சர்கள் இருந்தன
4. தீவிரவாதிகள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்பை கமலேஷ் குமாரியாதவ் என்ற பெண் காவலர் முதன்முதலாகக் கண்டறிந்து மற்ற அதிகாரிகளை உஷார் படுத்தினார்.
5. கமலேஷ் குமாரி மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கமலேஷ் குமாரி உயிரிழக்கும் முன் தீவிரவாதிகளில் ஒருவர் மனித வெடிகுண்டாக வந்திருந்தார், அவரின் திட்டத்தை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார்
ஒவ்வொரு கிராமத்திலும் ஆர்எஸ்எஸ் கிளையை உருவாக்க வேண்டும்: மோகன் பகவத் வலியுறுத்தல்
6. தீவிரவாதிகள் தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி, நாடாளுமன்றத்தின் பிரதான கட்டிடத்துக்குள் நுழைந்தனர்.
7. நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்ததால், அப்போது 100 எம்.பி.க்கள்வரை உள்ளே இருந்தனர்.
8. ஜம்மு காஷ்மீரில் இருந்து 100 பேர் கொண்ட துணை ராணுவப்படையினர் டெல்லிக்கு திரும்பி இருந்தனர். உடனடியாக இந்தத் தகவல் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் களத்தில் இறங்கினர். தீவிரவாதிகளுக்கு எதிராக சிஆர்பிஎப் அதிரடியாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியதில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
9. ஒரு மணிநேரம் நடந்த இந்தத்தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர்
10. டெல்லி சிறப்பு போலீஸார் இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி அடுத்த 72 மணிநேரத்தில் 4 பேரைக் கைது செய்தது.இதில் அப்சல் குரு குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2013, திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். மற்றொருவரான சவுகத் ஹூசைன் சிறையில் உள்ளார், மேலும் 2 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.