India China: மோடி அரசு இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தைக் கூட யாரும் பிடிக்க முடியாது: அமித் ஷா ஆவேசம்

By Pothy Raj  |  First Published Dec 13, 2022, 1:05 PM IST

மத்தியில் மோடி அரசு ஆட்சியில் இருக்கும் வரை, ஒரு அங்குல இடத்தைக் கூட யாரும் கைப்பற்ற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்


மத்தியில் மோடி அரசு ஆட்சியில் இருக்கும் வரை, ஒரு அங்குல இடத்தைக் கூட யாரும் கைப்பற்ற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்

அருணாச்சலப்பிரதேசத்தின் தவான் செக்டர் பகுதியில் கடந்த 9ம் தேதி இந்தியா, சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன வீரர்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதலில்இரு நாட்டு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

Tap to resize

Latest Videos

21 ஆண்டுகள் நிறைவு!நாடாளுமன்ற தீவிரவாதத் தாக்குதல் பற்றிய 10 முக்கிய தகவல்கள்

இந்த விவகாரம் வெளியானதையடுத்து, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரியிருந்தனர். மக்களவை தொடங்கியதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், டிஆர் பாலு, அசாசுதீன் ஒவாய்சி, ஆகியோர் இந்தியா, சீனா ராணுவவீரர்கள் மோதல் விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சிகள் விவாதிக்க விரும்பினால், நோட்டீஸ் அளிக்க வேண்டும். நோட்டீஸ்அளித்தபின் அது ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு அதன்பின் விவாதம் நடக்கும் என்றார்.

ஆனால், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதையடுத்து, அவையை 12 மணிவரை மக்களவைத் தலைவர் ஒத்திவைத்தார்.

இந்தியா-சீனா ராணுவீரர்கள் மோதல்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

அதன்பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது: 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி இருக்கும் வரை, இந்தியாவின் நிலத்தில் ஒரு அங்குலத்தைக்கூட யாரும் பிடிக்க முடியாது. கேள்வி நேரத்தை நடத்தவிடாமல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையூறுசெய்தது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிப்பார் எனத் தெரிவித்தபோதிலும் இடையூறு செய்தனர்.

அப்போது கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விப்பட்டியலைப் பார்த்தேன், அதில் 5வது கேள்வியைப் பார்த்தபின்புதான் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த அளவு பதற்றம் அடைகிறது எனத் தெரிந்தது.
நான் மீண்டும் சொல்கிறேன், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி இருக்கும் வரை இந்திய நிலத்தில் ஒரு அங்குலத்தைக் கூட யாரும் பிடிக்க முடியாது”  எனத் தெரிவி்த்தார்
 

click me!