கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய அங்கோர் வாட் கோயிலை புதுப்பிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது, இந்தியாவின் நாகரீகம் இந்தியாவுடன் முடிந்துவிடவில்லை, உலக நாடுகளில்பரவியுள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்தார்.
கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய அங்கோர் வாட் கோயிலை புதுப்பிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது, இந்தியாவின் நாகரீகம் இந்தியாவுடன் முடிந்துவிடவில்லை, உலக நாடுகளில்பரவியுள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்தார்.
இந்தியர்களின் கலை,கலாச்சாரம் சென்று சேராத நாடுகளே இல்லை என்று கூறிவிடலாம். பண்டைய காலத்தில், இந்தியர்கள் கடல்தாண்டி வாணிகம் மட்டும் செய்யவில்லை, சென்ற இடங்களில் எல்லாம் கலாச்சாரத்தின் எச்சங்களை, கலைகளின் எச்சங்களை வைத்து திரும்பியுள்ளனர்.
இந்தியா-சீனா ராணுவீரர்கள் மோதல்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
அந்த வகையில் உலகின் கோயில்நகரம் என்ற அழைக்கப்படும் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயில், இந்திய கலையின், குறிப்பாக தமிழர்களின் கட்டிடக் கலையை ஒட்டி உருவாக்கப்பட்ட கோயிலாகும். சிவன், விஷ்ணு இருவருக்கும் கோயில் அமைக்காமல் சூரியனுக்காக கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கோர் வாட் என்பது கெமர் மொழி. அங்கோர் என்பது நகரம், வாட் என்பது கோயில் நகரம் என்று அர்த்தமாகும்.
சூரியவர்மன் என்ற மன்னரால், சூரியணுக்காக கோயில் கட்டி, அதன் மூலம் விஷ்ணுவைக் கொண்டாடும் கோயிலாக அங்கோர் வாட் அமைந்துள்ளது. ஆனால், 12ம் நூற்றாண்டுக்குப்பின் பெளத்த மதம் வேறூன்றியபோது, அங்கோர்வாட் கோயில் புத்தஆலயமாக மாற்றப்பட்டது.
கர்நாடகாவில் முதல்முறையாக 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு: அறிகுறிகள் என்ன?
இந்த அங்கோர்வாட் கோயில் சீரமைப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். சமூகம் மற்றும் தேசத்தை கட்டிஎழுப்புதலில் கோயில்களின் பங்கு என்ற தலைப்பில் ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்தியாவில் மட்டும் கோயில்கள் இல்லை, இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டும் இ்ல்லை. அதற்கு அப்பாலும் இருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய கோயிலான அங்கோர் வாட் கோயிலை துணை குடியரசுத் தலைவருடன் சென்று பார்வையிட்டேன்.
இன்று அங்கோர் வாட் கோயிலை இந்தியா சீரமைத்து,புணரமைத்து வருகிறது. இந்தியாவுக்கு வெளியேயும் இந்திய அரசு பங்களிப்புகளைச் செய்து வருகிறது, இந்திய நாகரீகம் என்பது, இந்தியாவுக்கு அப்பார்பட்டும் இருக்கிறது.
இந்திய கலாச்சராத்தை நாம் மீட்டெடுத்து, மறுசீரமைத்து, புதுப்பிக்கும்போது, நம்முடைய எல்லை இந்தியாவுடன் முடிந்துவிடுவதில்லை. உலகம் முழுவதும் நமக்கான எல்லைபரந்து விரிந்துள்ளது. நமது நாகரீகம் எங்கு சென்றது என்பது மட்டுமல்ல, நமது பயணிகள், நமது வியாபாரிகள் எங்கு சென்றார்கள், இறை நம்பிக்கை உள்ளவர்கள் எங்கே போனார்கள் என்பதைப் பொருத்து இருக்கிறது
பல ஆண்டுகளுக்கு முன் நான் சீனாவுக்கான தூதராக இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். சீனாவின் கிழக்குக் கடற்கரையில் ஏராளமா இந்துக் கோயில்களின் தடயங்களைப் பார்த்திருக்கிறேன்.
சீனாவிடமிருந்து ரூ.1.35 கோடி நன்கொடை பெற்ற ராஜீவ்காந்தி அறக்கட்டளை: காங்கிரஸை கடுப்பேற்றிய அமித் ஷா
அயோத்தி மற்றும் கொரியாவுக்கும் இடையே சிறப்பான தொடர்பு இருக்கிறது. அயோத்தியை மேம்படுத்த வேண்டும், புனரமைக்க வேண்டும் என கொரிய மக்கள் நினைக்கிறார்கள். பஹ்ரைனில் உள்ள ஸ்ரீநாத் கோயிலும் நாம் கட்டியுள்ளோம். இவை அனைத்தும் நம்முடைய முன்னோர்கள் அங்கு சென்று கட்டியது. நமக்கு பெருமைதரக்கூடியது என்னவென்றால், ஐக்கிய அரபு அமீரகத்தில் கோயில் கட்டியிருக்கிறோம், பஹ்ரைனில் கோயில் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. விடய்நாமில் ஏராளமான ஆன்மீகப் பணிகளைச் செய்துள்ளோம்.
நம்முடைய கலாச்சராத்தை, மதிப்புகளை, தத்துவங்களை, மதிப்புகளை, வாழ்க்கை நெறியை, எவ்வாறு உலகின் பிற பகுதிகளுக்கும் நம்முடைய செயல்பாடுகள் மூலம் கொண்டு செல்கிறோம் என்பதைப் பொறுத்து இருக்கிறது. இதை செய்வதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடமைப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே இருக்கும் மக்களையும்நாம் ஆதரிக்கிறோம்.அமெரிக்காவில் மட்டும் 1000 இந்துக்கோயில்கள் உள்ளன
வெளிநாடுகளில் மட்டும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட 3.5 கோடி இந்தியர்கள் வாழ்கிறார்கள், அவர்களால்தான் இந்தியக் கலாச்சாரம் அங்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆதலால், எனவே, அவர்களுக்கு ஆதரவளிப்பது இன்று எங்கள் முயற்சியாகும், மேலும் நாங்கள் அதை வெவ்வேறு வழிகளில் செய்கிறோம்.
நேபாளத்தில் ராமாயண கோயில் அமைக்க ரூ.200 கோடி தருவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இலங்கையின் மன்னார் நகரில் திருக்கீத்தீஸ்வரம் கோயிலை புனரமைத்துள்ளோம். கடந்த 12 ஆண்டுகளாகஇந்தக் கோயில் பூட்டியே இருந்தது, இந்தக் கோயிலில் இந்திய அரசு கவனம் செலுத்தி, முயற்சிகள் செய்து, கோயிலை புனரமைத்து அதை சாத்தியமாக்கியுள்ளது.
2015ம்ஆண்டு நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டபின் ஏராளமான கோயில்கள் சிதலமடைந்தன. அந்த கோயில்களை சீரமைக்கவும், புனரமைக்கவும் 5 கோடி டாலர்கள் தருவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டது.
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்