மத்திய அரசு ஊழியர்கள் யோகா இடைவேளை எடுத்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தபடியே சிறிய யோகாசங்கள் செய்து உடலையும் பணியில் உற்சாகத்துடன் செயல்படலாம் என மத்திய அரசு சொல்கிறது.
மத்திய அரசு அலுவலகங்களில் பணிக்கு இடையில் சற்றுநேரம் நாற்காலியில் அமர்ந்துகொண்டே யோகா செய்வது மன அழுத்தத்தைப் போக்கிக்கொண்டு புத்துணர்ச்சி அடையலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது.
அனைத்து அமைச்சரகங்கள் மறுறம் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இந்த யோகா இடைவேளை தொடர்பாக பரிந்துரை கடிதம் மத்திய அரசு சார்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் யோகா இடைவேளையின்போது தாங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே யோகா செய்வதற்கான வழிமுறையை கற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
படையெடுக்கும் புதுப்புது 5ஜி ஸ்மார்ட்போன்கள்... விலை குறையும் 4ஜி மொபைல்கள்... எதை வாங்கலாம்?
அரசு ஊழியர்கள் பணிச்சுமைக்கு இடையே யோகா பயிற்சி செய்ய தனியாக நேரம் ஒதுக்க முடியாது என்பதால் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு தீர்மானத்துள்ளது எனக் கூறப்படுகிறது. ஆயுஷ் அமைச்சகம் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையத்துடன் இணைந்து இதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
யோகா இடைவேளை எடுத்துக்கொள்வதன் வாயிலாக மத்திய அரசு ஊழியர்கள், வேலை நேரத்தில் சிறிது நேரம் சின்ன சின்ன யோகா ஆசனங்களைச் செய்து பார்க்கலாம். யோகா செய்வதால் பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தம் தணிந்து, புத்துணர்ச்சி பிறப்பதை உணரலாம் என மத்திய அரசு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
போபால் அரசு அலுவலகத்தில் மாபெரும் தீ விபத்து: ராணுவ உதவியுடன் 15 மணிநேரம் நீடித்த தீயணைப்புப் பணிகள்
மிக எளிமையான யோகாசங்கள் சிலவற்றை செய்து உடலையும் மனதையும் உற்சாகத்துடன் வைத்துக்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு சொல்கிறது.
நாற்காலியில் அமர்ந்தபடியே செய்யக்கூடிய ஈசியான யோகா பயிற்சிகள் என்னென்ன? அவற்றை எப்படிச் செய்வது என்பதை விளக்கும் யூடியூப் வீடியோக்கள் சிலவற்றையும் மத்திய அரசு பரிந்துரை செய்கிறது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இவை தவிர யோகா இடைவேளை பற்றி மேலும் அறிந்துகொள்வற்கு https://yoga.ayush.gov.in/Y-Break/ என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கலாம் என்றும் மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
மோடி அரசு குறித்து ஜாக் டோர்சியின் விமர்சனம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்டமா?