ஸ்விகி இன்ஸ்டாமார்ட் 2023 Report : அதிக எண்ணிக்கையிலான காண்டம் ஆர்டர் செய்யப்பட்டது இந்த மாதத்தில் தான்..

By Ramya s  |  First Published Dec 20, 2023, 3:00 PM IST

ஸ்விகி இன்ஸ்டா மார்ட்டில் வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவை அதிக ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான Swiggy, தனது வருடாந்திர ட்ரெண்டிங் அறிக்கையின் 8-வது பதிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்விகி இன்ஸ்டா மார்ட்டில் வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவை அதிக ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சென்னையை சேர்ந்த பயனர் ஒருவர் காபி, ஜூஸ், குக்கீஸ், நாச்சோஸ் மற்றும் சிப்ஸ் ஆகியவற்றின் கலவைக்காக ரூ.31,748 செலவழித்து மிகப்பெரிய ஆர்டர் செய்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் 67 ஆர்டர்கள் செய்து சாதனை படைத்துள்ளார்.

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

செப்டம்பர் மாதத்தில் அதிகரித்த காண்டம் விற்பனை

பிப்ரவரி மாதம் காதலர் மாதமாகப் புகழ் பெற்றிருந்தாலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தான் காண்டம் விற்பனை உச்சத்தை எட்டியது. 2023 ஸ்விக்கி அறிக்கையின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காதல் மாதமாக உருவானது, ஏனெனில் செப்டம்பரில் தான் அதிக எண்ணிக்கையிலான காண்டம் ஆர்டர் செய்யப்பட்டது. இருப்பினும், அதிக காண்டம் ஆர்டர் செய்யப்பட்ட ஒரே நாள் ஆகஸ்ட் 12 ஆகும். அன்றைய தினம், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 5,893 யூனிட் ஆணுறைகளை விற்பனை செய்தது.

சுவாரஸ்யமாக, ஆணுறைகளை தொடர்ந்து, அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருளாக வெங்காயம் உள்ளது. அதைத் தொடர்ந்து வாழைப்பழங்கள் மற்றும் சிப்ஸ் ஆகியவை உள்ளன.

ஆரோக்கிய ஸ்னாக்ஸ்

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்-ல் இந்த ஆண்டுஆரோக்கியமான தின்பண்டங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மக்கானா (Makhana) ஒரு பிரியமான தேர்வாக மாறியது, 2023 இல் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கானா ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.. இது ஆரோக்கியமான உணவுக்கான மாற்றத்தை குறிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பழங்களை பொறுத்தவரை, மாம்பழங்கள் தெளிவான விருப்பமாக முதலிடத்தைப் பெற்றன. இந்திய நகரங்களில், பெங்களூரு மாம்பழ ஆர்வலர்களுக்கான இறுதி மையமாக உருவெடுத்தது, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களின் ஒருங்கிணைந்த மாம்பழ ஆர்டர்களை விட பெங்களூருவில் இருந்து அதிகளவில் மாம்பழம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மே 21 அன்று இந்தியா முழுவதும் 36 டன் மாம்பழங்கள் அனுப்பப்பட்டன. 

12/31/23: ஆண்டின் கடைசி நாளில் நிகழும் எண் கணித அதிசயம்! ஒரு நம்பருக்குள்ள இவ்வளவு இருக்கா!

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் 

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் இந்தியாவின் முதன்மையான விரைவான-வணிக மளிகை சேவையாக விளங்குகிறது. இந்த சேவை ஆகஸ்ட் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, 25க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்கி வரும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஸ்விக்கியின் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பிரத்யேக டெலிவரி நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் சில நிமிடங்களில் மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்களை விரைவாக வழங்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!