பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்று கேதார்நாத் கோவில். இந்தக் கோவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கோவிலில் தங்கம் காணாமல் போனதாக எழுந்த குற்றச்சாடை கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது.
கேதார்நாத் கோவிலில் இருந்து சுமார் 228 கிலோ தங்கம் காணாமல் போய் இருப்பதாக ஜோதிர்மத் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்து இருக்கும் செய்தியில், ''கேதார்நாத் கோவிலில் தங்க ஊழல் நடந்துள்ளது. ஏன் இதுகுறித்து இன்னும் பேசப்படாமல் இருக்கிறது. அங்கு ஊழல் நடந்த பின்னர் தற்போது கேதார்நாத் டெல்லியில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு ஊழல் நடக்கும்.
''கேதார்நாத் கோவிலில் இருந்து 228 கிலோ தங்கம் காணாமல் போய் உள்ளது. இதுகுறித்து இதுவரையும் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இதற்கு யார் பொறுப்பு? தற்போது இதற்கு அவர்கள் என்ன கூறுகிறார்கள். டெல்லியில் கேதார்நாத் கட்டுவோம் என்று பதில் அளிக்கின்றனர். இது நடக்காது. நாம் அனைவரும் சனாதன தர்மத்தை தான் கடைப்பிடிக்கிறோம். ஏமாற்றுவதுதான் மிகப்பெரிய பாவம். உத்தவ் தாக்கரே ஏமாற்றப்பட்டு இருக்கிறார். நாம் அனைவரும் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். மீண்டும் அவர் மகாராஷ்டிராவின் முதல்வர் ஆகும் வரை நம்முடைய வலி நீங்காது.
undefined
கர்நாடகாவில் தனியார் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டு ஒத்திவைப்பு! கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பல்டி!
மகாராஷ்டிரா மக்களிடம் இந்த வலி இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டி இருந்தது. தங்களது தலைவரை தேர்வு செய்த மக்களை ஏமாற்றுவதும் மரியாதை இல்லாத செயல்தான். மக்கள் தேர்வு செய்த அரசை கலைப்பது தவறுதான்'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள் கிழமை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்த பின்னர் இந்த தகவலை சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஜூலை 10 ஆம் தேதி டெல்லியில் கேதார்நாத் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டு இருந்தார். இதற்கு கேதார்நாத் சுவாமிகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தி இருந்தனர்.
ஆனால், இவரது குற்றச்சாட்டுக்கு கோவில் நிர்வாகி அஜெந்தர அஜய் மறுப்பு தெரிவித்துள்ளார். ''காங்கிரஸ் தவறான செய்தியை பரப்பி வருகிறது. இந்த சதி செயலை மீடியாக்களில் கசிய விட்டு வருகின்றனர். கோவில் முழுவதும் தங்கத் தகடு வேயப்பட்டுள்ளது. இது நன்கொடையாளர்கள் பணத்தில் தான் செய்யப்பட்டுள்ளது. சுவாமிகள் கூறும் குற்றச்சாட்டு தவறானது. கோவில் வளாகம் முன்பு 228 கிலோ வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது தற்போது தாமிரம் வேயப்பட்டு அதன் மீது லேசான தங்கத் தகடு கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் 228 கிலோ தங்கம் காணாமல் போனது என்று போலி செய்தியை பரப்பி வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.