உடல்நலக்குறைவால் சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதி

Asianet News Tamil  
Published : Nov 09, 2016, 12:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
உடல்நலக்குறைவால் சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதி

சுருக்கம்

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சர்க்கரை நோய் மற்றும் சில உடல் உபாதைகள் காரணமாக நேற்று இரவு 7.22 மணி அளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு endocrinological பரிசோதனை செய்யப்படவுள்ளதாக மூத்த மருத்துவர் கூறினார். தற்போது கார்டியோ -நியூரோ சென்டரில் அனுமதிக்கப்பட்டுள்ள சுஷ்மா சுவராஜ்க்கு அப்பிரிவின் தலைமை மருத்துவர் பல்ராம் ஐரான் மேற்பார்வையின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

64 வயதாகும் சுஷ்மா சுவராஜ், நெஞ்சு வலி தொடர்பான பிரச்னை காரணமாக ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதேபோல் கடந்த அக்டோபர் 25ம் தேதி வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

LPG Crisis: 10 நாள்ல கேஸ் தீர்ந்துடுமா? போர் பதற்றத்தால் இந்தியாவில் அசாதாரண சூழல்..
பெற்றோர் எதிர்ப்பு.. போலீஸில் தஞ்சம்.. காதலனை கரம் பிடித்த கும்பமேளா வைரல் அழகி மோனலிசா!