விவிபேட் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்; 100% வாக்குச் சீட்டு சரிபார்ப்பு சாத்தியமா?

By SG BalanFirst Published Apr 25, 2024, 9:26 PM IST
Highlights

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 88 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நாளை தீர்ப்பு வெளியாக இருக்கிறது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகளை விவிபேட் (VVPAT) இயந்திரத்தில் உள்ள வாக்குச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 88 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நாளை தீர்ப்பு வெளியாக இருக்கிறது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கும்.

இந்த வழக்கை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான இலாப நோக்கற்ற சங்கம் (ADR) உள்ளட்ட பலர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். புதன்கிழமை இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தபோது, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

அமேதியில் மே 2ஆம் தேதி ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்வார்: இளைஞர் காங். தலைவர் தகவல்

முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்திறன் குறித்து சந்தேகம் எழுந்தாலும் நீதிமன்றத்தால் தேர்தல் நடத்துவதைக் கட்டுப்படுத்த அல்லது உத்தரவுகளை வழங்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை டிங்கர் செய்து முடிவுகளை மாற்றியமைக்க முடியும் என்று மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுகிறது. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நன்மைகளை சந்தேகிப்பவர்களை மாற்ற முடியாது என்றும் மீண்டும் பழைபடி வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

இலவச லேப்டாப் திட்டம் பற்றிய தகவல் தவறானது: இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு விளக்கம்

click me!